உலகம் முழுவதும் நாளை (பிப்ரவரி 7 ) உலக இணைய பாதுகாப்பு நாள் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், இணையதளத்தில் பயனாளர்கள் எவ்வாறு தங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது என்பது குறித்த தகவல்களை வாட்சப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மோசடிகளை எவ்வாறு கண்டறிவது மற்றும் தனிப்பட்ட தகவல்களை மோசடியாளர் களிடமிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த வழிகாட்டுதல்களும் அதில் இடம்பெற்றுள்ளது.
பயனாளர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களான முகவரி,செல்போன் எண், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு எண், வங்கிக் கணக்கு எண் போன்றவற்றை பகிரக் கூடாது.
தனிநபர் தங்களது புரொஃபைல் பிக்சர், கடைசியாக ஆன்லைன் வந்தது, ஆன்லைன் டேட்டஸ், தங்களைப் பற்றி, ஸ்டேட்டஸ் என அனைத்தையும் யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதில், செல்போன் எண் நம்மிடம் இருக்கும் கான்டாக்ட் ஒன்லி அல்லது யாருமே பார்க்கக் கூடாது என்பதை கிளிக் செய்து கொள்ளலாம். நீங்கள் ஆன்லைன் வந்தால் அது யாருக்கெல்லாம் தெரிய வேண்டும், தெரியக் கூடாது என்பதையும் தனிநபர்கள் பாதுகாப்பாக அமைத்துக் கொள்ளலாம்.
வாட்சப் பயனாளர்கள் வேண்டுமென்றால் ட்ரெண்ட் அடுக்கு வெரிஃபிகேஷனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை உங்கள் செல்போன் திருடு போனால் இது பயன்படும்.

ஃபார்வார்டு ஆகும் அனைத்துத்தகவல்களையும் உண்மைதானா என்பதை அறியாமல் மற்றவர்களுக்கு பகிர்வதைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை வாட்சப் கொண்டு வந்திருக்கிறது.
எனவே, உண்மை என்று தெரியாத எதையும் யாரும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறது. ஒருவேளை மோசடியான தகவல்கள் ஏதேனும் வந்தால் அது பற்றி பயனாளர்கள் புகார் தெரிவிக்கலாம்.
இதுபோன்ற மோசடித் தகவல்களுடன் ஒரு லிங்க் இணைக்கப்படும். அதனை கிளிக் செய்தால் உங்கள் அனைத்துத் தகவல்களும் திருடப்படும் அபாயம் உள்ளது.
அந்த தகவல்கள் வரும் எண்ணை தொடர்ந்து அழுத்தினால் பிளாக் அண்ட் ரிப்போர்ட் என்று வரும் அதனை தேர்வு செய்யவும்.
போலி செய்தியா? எப்படி கண்டுபிடிப்பது? இந்தியாவில் மட்டும் 10 உண்மை கண்டறியும் அமைப்புகள் வாட்சப்பில் உள்ளன. எனவே, அதன் மூலம், நமக்கு வரும் தகவல்கள் உண்மையானவையா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
போலியான தகவல்களை பகிராமல் தடுக்கலாம். போட்டோ, வீடியோ, குரல் பதிவு என எது பற்றியும் உண்மை கண்டறிந்த பிறகே அதனை முழுமையாக நம்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
1300 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை : துருக்கிக்கு தோள் கொடுக்கும் இந்தியா
பாலத்தை வித்தாங்க..இன்ஜினை வித்தாங்க..இப்போ ரயில் தண்டவாளத்தையே திருடிட்டாங்க!