பற்களில் உள்ள மஞ்சள் கரை டார்ட்டர் அல்லது பிளேக் என்று அழைக்கப்படுகிறது. அதை சுத்தம் செய்ய சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
பேக்கிங் சோடா: பேக்கிங் சோடாவை பேஸ்டாகப் பயன்படுத்தலாம். இது பற்களில் உள்ள மஞ்சள் படலத்தை அகற்ற உதவும், அத்துடன் பாக்டீரியாவையும் அழிக்கும்.
ஆயில் புல்லிங்: ஆயில் புல்லிங் என்பது பற்களை வெண்மையாக்கும் ஒரு பழமையான தீர்வாகும்.
இதற்கு ஒரு ஸ்பூன் சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை வாயில் 15-20 நிமிடங்கள் கொப்பளிப்பதன் மூலம் பற்கள் பளபளப்பாக மாறும்.
ஆரஞ்சு அல்லது எலுமிச்சை தோல்: ஆரஞ்சு அல்லது எலுமிச்சை தோலை பற்களின் மீது சுமார் 2 நிமிடம் தேய்த்தால் மஞ்சள் தன்மை நீங்கும். இவற்றின் தோலில் உள்ள சிட்ரிக் அமிலம் பற்களை பளபளப்பாக மாற்ற உதவுகிறது.
வாழைப்பழ தோல்: பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்க, வாழைப்பழத் தோலின் உட்புறத்தை பற்களில் தேய்த்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதுவும் மஞ்சள் நிறத்தை நீக்கும்.
கடுகு எண்ணெய் மற்றும் உப்பு: கடுகு எண்ணெய் மற்றும் உப்பு பற்களின் மஞ்சள் நிறத்தை நீக்கும். அரை டீஸ்பூன் உப்பில் சில துளிகள் கடுகு எண்ணெயைக் கலந்து, பற்களில் மசாஜ் செய்தால் மஞ்சள் நிறம் நீங்கும்.
ஸ்ட்ராபெர்ரி: மசித்த ஸ்ட்ராபெர்ரிகளை, பற்கள் மற்றும் ஈறுகள் மீது இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் தேய்க்கவும். இதற்குப் பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதுவும் பற்களுக்குப் பொலிவைத் தரும்.
ஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகரை சிறிது தண்ணீரில் சேர்த்து கழுவினால், பற்களில் உள்ள மஞ்சள் படலத்தை அகற்றலாம்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
சுபஸ்ரீ
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
பி.எம்.டபிள்யூ கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை: வைரல் வீடியோ!
கிச்சன் கீர்த்தனா: முருங்கைக் கீரை வேர்க்கடலை துவட்டல்
டிஜிட்டல் திண்ணை: சிக்னல் கொடுத்த ஸ்டாலின்… அமர் பிரசாத் மீது பாயும் குண்டாஸ்!