10 Ways to Whiten Your Teeth

பியூட்டி டிப்ஸ்: பற்களில் மஞ்சள் கறை… நீக்குவது எப்படி?

டிரெண்டிங்

நம் புற அழகைத் தீர்மானிக்கும் உறுப்புகளில் முக்கியமானது பல். பற்களில் கறை ஏற்பட்டால், அது முகப்பொலிவை பாதிக்கும். பற்களில் கறை படிவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. பல் துலக்காததாலும், சாப்பிட்ட பொருள்கள் பற்களில் தேங்குவதாலும் ஏற்படும் மஞ்சள் கறையை எளிய வீட்டு மருத்துவம் மூலமாகவே நீக்கிவிடலாம். எப்படி?

“பல் துலக்கும்போது, எலுமிச்சைச் சாற்றோடு, சிறிது உப்பு சேர்த்து கறைபட்ட இடத்தில் தேய்த்து, வாய் கொப்பளிக்க வேண்டும்.

நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் திரிபலா சூரணத்தைக் கொண்டு பல் துலக்கினால், மஞ்சள் கறை கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும்.

காலையில் நல்லெண்ணெயைக் கொண்டு வாய் கொப்பளிப்பது (Oil Pulling) நல்லது.

உமிழ்நீர் அதிகமாகச் சுரப்பதாலும் பற்களில் மஞ்சள் கறை ஏற்படலாம். இதைத் தவிர்க்க, தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும்.

சாப்பிட்டு முடித்ததும், `மவுத் வாஷ்’ பயன்படுத்துவதன் மூலம் கறையைத் தவிர்க்கலாம். தண்ணீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிப்பது, மவுத் வாஷைவிடச் சிறந்தது.

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் எலுமிச்சை – உப்பு கலவை, திரிபலா சூரண உபயோகம், ஆயில் புல்லிங் போன்றவற்றை அளவுக்கு மீறிச் செய்தால், பற்களில் சென்சிட்டிவ் தன்மை அதிகரித்து, கூச்ச உணர்வு ஏற்படும்.

எனவே, அளவாகப் பயன்படுத்துவது நல்லது. வீட்டு வழிமுறைகள் மஞ்சள் கறையை நீக்கக் கைகொடுக்கவில்லையென்றால், பல் மருத்துவரை அணுகி, செயற்கையாகச் சுத்தம் செய்து கொள்ளவும்” என்றார்கள் பல் மருத்துவர்கள்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சரிகிறதா ‘சலார்’ வசூல்?… கலெக்‌ஷன் எவ்வளவு?

டிஜிட்டல் திண்ணை: பொதுக்குழு தீர்மானம்- எடப்பாடிக்கு உதவிய பன்னீர்

வேறு எதையும் சிந்திக்கவே மாட்டீர்களா?: அமைச்சர் சேகர்பாபுவிற்கு தமிழிசை கேள்வி!

ஜிகிரி தோஸ்து: விமர்சனம்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *