ஒரு சிலருக்கு 40 வயதுக்கு மேல் கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றும். நன்றாகத் தூங்குவார்கள். அதிக நேரம் கம்ப்யூட்டர் பயன்படுத்த மாட்டார்கள். ஆனாலும் கருவளையம் ஏற்படும். இதற்கான தீர்வு என்ன?
கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மெல்லியது. கண்களைச் சுற்றிய எலும்பு அமைப்பு, கருவிழியின் அளவோடு பொருந்திப் போகிற மாதிரி சரியாக இருக்க வேண்டும். கருவிழி சிறியதாகவும், எலும்பு அமைப்பு பெரியதாகவும் இருந்தால், கண்கள் சுருங்கினாற் போலத் தோற்றமளிக்கும். வயதாவது, எடைக்குறைப்பு போன்ற பல காரணங்களால் கண்களைச் சுற்றியுள்ள கொழுப்பானது குறையத் தொடங்கும். அதன் விளைவாகவும் கண்களுக்கடியில் கருவளையங்கள் ஏற்படலாம்.
அதனால் சிலர் க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், வெறும் க்ரீமால் இந்தப் பிரச்சினையை சரி செய்துவிட முடியாது. உடலில் நீர்ச்சத்து குறைந்தால்கூட அது கண்களைச் சுற்றியுள்ள சருமத்தில் பிரதிபலிக்கும். அதை கவனிக்காமல் விட்டால் கண்களைச் சுற்றி மெல்லிய சுருக்கங்கள் வரும். இதையெல்லாம் தவிர்க்க ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மிக முக்கியம். ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள், நட்ஸ் சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
அப்படியும் கருவளையம் மறையவில்லையென்றால் சருமநல மருத்துவர்களின் ஆலோசனைபடி அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: கூட்டணிக்காக இரண்டு சூரியன்களை இழந்த ஸ்டாலின்
டார்ச் லைட் பேட்டரிய கழட்டியாச்சு : அப்டேட் குமாரு
இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா!
ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் என்.சி.பி.காவல்!