முகம் அழகாக இருக்கிறது. ஆனால், மூக்கைச் சுற்றிதான் கரும்புள்ளிகள் இருக்கின்றன. என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த மசாஜ் முறை உதவும்.
கோதுமை மாவை சலித்து அதிலிருக்கும் தவிடை எடுக்கவும். கடையில் இருக்கும் கோதுமை மாவில் இந்த தவிடு இருக்காது. ஆனால், கோதுமையை வாங்கி மிஷினில் அரைக்கும்போது இந்த தவிடு கிடைக்கும்.
ஒரு டீஸ்பூன் தவிட்டுடன் சர்க்கரை அரை டீஸ்பூன் கலந்து பசுந்தயிரில் குழைத்தால் ஸ்க்ரப் போன்று சொரசொரப்பாக இருக்கும். How to Remove Blackheads on Nose
இந்த ஸ்க்ரப்பை பெருவிரல் மற்றும் சுட்டுவிரல் இரண்டுக்கும் நடுவில் எடுத்து மூக்கின் நுனியில் வைத்து கீழிருந்து மேலாக தேய்க்கவும். அதிக வேகத்தில் தேய்க்க கூடாது. மிருதுவாக ஸ்க்ரப் செய்து முடித்ததும் மூக்கின் நுனியில் வெந்நீரில் நனைத்த பஞ்சால் லேசாக அழுத்தி துடைத்து பார்த்தால் கரும்புள்ளிகள் வேரோடு வந்திருப்பதைப் பார்க்கலாம். அதைத் தொடர்ந்து அழுக்குகளும் வெளியேறி இருப்பதைப் பார்க்கலாம்.
தினமும் இந்த மசாஜ் செய்தால் சருமத்தில் பாதிப்பு உண்டாக கூடும். அதனால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் போதும். கோதுமை தவிடுக்கு பதிலாக கேழ்வரகு, கம்பு தவிடு பயன்படுத்தலாம். சர்க்கரைக்கு மாற்றாக ரவையும் பயன்படுத்தலாம்.
How to Remove Blackheads on Nose