ஹெல்த் டிப்ஸ்: காதுக்குள் புகுந்த பூச்சி…. விரட்டுவது எப்படி?

Published On:

| By christopher

காதுக்குள் பூச்சி போய்விட்டால் ஆபத்தா… அதனால் காது கேட்காமல்போக வாய்ப்பு உண்டா… அந்தப் பூச்சியை எப்படி வெளியேற்றுவது? பலருக்கும் எழும் சந்தேகங்கள் இவை… இதற்கான தீர்வு என்ன?

“காதுக்குள் பூச்சி சென்றுவிட்டால் அதற்கான சரியான தீர்வு, காது – மூக்கு – தொண்டை மருத்துவரிடம் சென்று அதை அப்புறப்படுத்துவதுதான். அது நடைமுறையில் சாத்தியம் இல்லாதபோது முதலுதவி செய்து நிவாரணம் பெறலாம்.

மிதமான வெந்நீரில் உப்பு கலந்து காதுக்குள் விடலாம் அல்லது மிதமான சூட்டில் சுத்தமான எண்ணெயை விடலாம்.

நீர் மிகவும் சுத்தமாக இருப்பது அவசியம். அதிகம் சூடு இல்லாமல் இருப்பது மிக அவசியம்.

இவ்வாறு செய்வதால் பூச்சி வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அப்படி பூச்சி வெளியேறாவிட்டாலும் அது இறந்துவிடுவதால் காது ஜவ்வைக் கடிப்பது போன்ற தொந்தரவுகள் ஏற்படாது. மருத்துவரிடம் சென்று காண்பிக்கும் வரை ஓரளவு தீவிரம் குறைவாக இருக்கும்.

காதுக்குள் பூச்சிகள் செல்வதால் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. காது கேட்காமல் போவதற்கான வாய்ப்பும் மிகவும் குறைவு.

எறும்பு, சின்ன வண்டு போன்ற பூச்சிகள் காதுக்குள் சென்று காது ஜவ்வு அல்லது சருமப் பகுதியைக் கடிப்பதால் வலி அல்லது ரத்தக் கசிவு ஏற்படலாம். அதற்காக பயப்பட வேண்டாம்.

ஏற்கெனவே காதிலிருந்து சீழ் அல்லது நீர் வந்திருந்தாலோ அல்லது காது ஜவ்வில் ஓட்டை இருப்பது மருத்துவர் மூலம் தெரிந்திருந்தாலோ, காதுக்குள் நீர் அல்லது எண்ணெய் ஊற்றாமல் இருப்பது மிக அவசியம்.

மருத்துவர் பரிந்துரையின் பேரில் வாங்கி வைத்த, காதுக்குள் விடும் சொட்டு மருந்து இருந்தால் அதை எமர்ஜென்சியாக பயன்படுத்தலாம்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் மருத்துவ உதவியை நாட வேண்டும்” என்று பொதுநல மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: சருமம் பளபளக்க… வீட்டிலேயே செய்யலாம் நலங்கு மாவு!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்: விருந்துக்கு செல்கிறீர்களா… அதற்கு முன் இதையெல்லாம் செய்யாதீங்க!

டாப் 10 நியூஸ் : இந்து மக்கள் கட்சி உண்ணாவிரத போராட்டம் முதல் இறுதிக்கட்டத்தில் சிட்னி டெஸ்ட் வரை

புத்தக கண்காட்சி அலப்பறைகள்… அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: தமிழிசைக்கு நட்டா தந்த நம்பிக்கை… அண்ணாமலை – சந்தோஷ் கெமிஸ்ட்ரி… தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது?

ஞானசேகரன் வீட்டில் எஸ்.ஐ.டி ரெய்டு… முக்கிய ஆவணங்கள் சிக்கியது!

செப்டிக் டேங்கில் விழுந்து குழந்தை பலி : அமைச்சர் கொடுத்த காசோலையை வீசி எறிந்த தாய்!

பட்டாசு ஆலை விபத்து : தலைமறைவான 4 பேர் மீது வழக்குப்பதிவு… உரிமம் ரத்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share