ஹெல்த் டிப்ஸ்: முழங்கை வலி… விடுபடுவது எப்படி?

Published On:

| By Kavi

How to Relive from elbow pain Quickly?

சமையல் வேலையில் முறுக்கு பிழிதல், எடை அதிகமுள்ள துணிகளைத் துவைத்தல், எலெக்ட்ரீஷியன், பிளம்பர் போன்ற வேலைகள், அசாதாரணமான நிலைகளில் கைகளை வைத்து கணினியை உபயோகித்தல் என இவை அனைத்துமே முழங்கை வலி ஏற்பட காரணமாகின்றன.

ஓவியர்கள் மற்றும் பல் மருத்துவர்கள்கூட இந்த நிலைமைகளால் அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள். தோராயமாக 30 முதல் 50 வயதுடையவர்களில் சுமார் 3% பேர் இந்த டென்னிஸ் எல்போ என்கிற முழங்கை வலியால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஒரு மருத்துவ புள்ளிவிவரம்.

முழங்கை வலியால் பாதிக்கப்ப்ட்டவர்கள், வலியை அதிகரிக்கச் செய்யும் செயல்களைக் குறைப்பது அல்லது தவிர்ப்பது வலி மீட்புக்கு முக்கியமானது.

ஐஸ்கட்டியைப் பயன்படுத்துவது வீக்கத்தைக் குறைக்கவும், வலியைக் குறைக்கவும் உதவும்.

இபுப்ரூஃபன் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்வது வலியைக் கட்டுப்படுத்தவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.

உடற்பயிற்சிகளை நீட்டித்தல் மற்றும் வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மீண்டும் மீண்டும் வலி ஏற்படுவதைத் தடுக்கும்.

டென்னிஸ் எல்போ, ரைட்டர்ஸ் எல்போ மற்றும் கோல்ஃபர்ஸ் எல்போ போன்ற முழங்கை வலிகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஏற்பட்டிருக்கும் மருத்துவ முன்னேற்றங்கள் நம்பிக்கைக்குரியவையாகவும் அதிர்ச்சி அலை சிகிச்சை மற்றும் புதுமையான ஸ்ட்ராப்பிங் நுட்பங்கள் வலி நிவாரணம் மற்றும் குணப்படுத்துவதற்கான புதிய வழிகளை வழங்குவதாகவும் உள்ளன.

எனவே, நீங்கள் முழங்கை வலியால் பாதிக்கப்பட்டிருந்தால் வலியியல் சிறப்பு மருத்துவரை அணுகவும். சரியான அணுகுமுறையுடன் செய்யப்படும் மருத்துவம் நீங்கள் விரும்பும் செயல்பாடுகளை விரைவில் மீண்டும் செய்ய உதவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பப்பாளிக்காய் சோள மசால் வடை!

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலைக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? ஸ்டாலின் மீது கூட்டணித் தலைவர்கள் வருத்தம்!

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறேனா? – சஸ்பென்ஸை உடைத்த பிரபல இயக்குநர்!

நீயும் என்ன விட்டுட்டு டீ பார்ட்டிக்கு போயிட்டியா? : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel