‘ஜர்னல் ஆஃப் எபிடமியாலஜி & கம்யூனிட்டி ஹெல்த்’ (Journal of Epidemiology & Community Health) இதழ் 40 முதல் 79 வயதுக்கு உள்பட்ட 72,000 பேரிடம் அன்றாட உறக்க முறை குறித்த பரிசோதனையில் சமீபத்தில் ஈடுபட்டது. How to regulate improper sleep?
அந்த ஆய்வின் முடிவில், ‘தினமும் 8 மணி நேரத் தூக்கத்தை ஒருவர் பெற்றாலும் உறங்கும் நேரமும் எழுந்திருக்கும் நேரமும் ஒவ்வொரு நாளும் மாறுபட்டால் அந்தத் தூக்கம் முறையற்றதாகக் கருதப்படுகிறது. How to regulate improper sleep?
இம்மாதிரியான உறக்கம் உடல்நலனைப் பாதித்து மாரடைப்பு, பக்கவாதம், இதயச் செயலிழப்பு போன்றவை ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர்க்க… மடிக்கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்கள் நமது படுக்கையறையை பொழுதுபோக்குக்கான அறையாக மாற்றிவிட்டன. உங்களது தூக்கத்தை மேம்படுத்த நீங்கள் விரும்பினால், இந்த சாதனங்களை பயன்படுத்துவதில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, செல்பேசிகள், மடிக்கணினிகள் மற்றும் கணினி ஆகியவற்றை பிற அறைகளில் வைக்க வேண்டும். மேலும், அலாரம் வைப்பதற்கு பிரத்யேக கடிகாரங்களை பயன்படுத்துவதன் மூலம் உங்களது படுக்கைக்கு அருகே மொபைலின் தேவையை தவிர்க்க முடியும் என்கிறார்கள்.
அடுத்து, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குச் செல்வதே சிறந்தது. வழக்கமான தூக்க நேர அட்டவணையைப் பின்பற்றுவதன் மூலம், தினமும் இரவில் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
அதாவது தினமும் படுக்கைக்கு செல்லும் நேரமும், காலையில் எழும் நேரமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் – வார இறுதி நாட்களிலும் இதைக் கடைபிடிக்க வேண்டும்.
நம் படுக்கை அறை என்பது தூக்கத்துக்கான இடமாக இருக்க வேண்டும், மற்றவற்றுக்கு குறைந்த இடமே தர வேண்டும். பெரும்பாலானவர்கள் இருளான அறையில், பொருட்கள் குவித்து வைக்காத, குளுமையான மற்றும் பிற சாதனங்கள் இல்லாத, கவனத்தை திருப்பும் அம்சங்கள் இல்லாத அறையில் நல்ல தூக்கத்தைத் தரும்.
படுக்கையறையை குளிர்ச்சியாக வைத்திருப்பது நல்லது. ஏனெனில் குளிர்ந்த வெப்பநிலையில் நமது உடலுக்கு தூக்கம் கிடைக்க எளிதாக இருக்கும்.
தூக்கத்திற்கு முன்பு வெதுவெதுப்பான குளியல் எடுக்கலாம், தூக்கத்திற்கு முன்பு சிறிது நேரம் தியானம் செய்யலாம். பால், பாதாம் பருப்பு, வாழைப்பழம் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இரவில் லேசான உணவை தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு எடுத்துகொள்ளலாம். உணர்வைத் தூண்டும் உணவு வகைகளைத் தவிர்க்கலாம் என்று அறிவுறுத்துகிறார்கள்.