பியூட்டி டிப்ஸ்: கண்ணாடி அணிய விரும்பாதவரா நீங்கள்?

Published On:

| By Minnambalam Desk

நம்மில் பலருக்கு கண்களில் பார்வை குறைபாடு வந்தது தெரிந்தும் அதை சரியாக்க கண்ணாடி அணிய விரும்ப மாட்டார்கள். இந்த நிலையில் கண்களின் பவரை இயற்கையாகக் குறைக்க முடியுமா… கண்ணாடி அணியும் தேவை இல்லாதபடி மாற்ற முடியுமா என்கிற கேள்வியை கண் மருத்துவரிடம் முன் வைத்தோம். அவர் சொன்ன விளக்கம் இதோ… How to reduce eye strain naturally?

“நீங்கள் 20 வயதுக்கு குறைவானவர் என்றால் `ஆர்த்தோ-கே லென்ஸ்’ (Ortho-k lens) எனப்படும் பிரத்யேக லென்ஸ் ஒன்று இப்போது கிடைக்கிறது. இவற்றை இரவில் பயன்படுத்த வேண்டும்.

காலையில் அந்த லென்ஸை அகற்றிவிட்டு, நார்மலாக பார்க்க ஆரம்பிக்கலாம். அப்போது கண்ணாடி தேவையில்லாமல் உங்களுடைய பார்வை நன்றாக இருக்கும். இது 48 மணி நேரத்துக்கு நீடிக்கும். மறுபடி அடுத்த நாள் இரவு லென்ஸை அணிந்துகொள்ள வேண்டும்.

21 வயது நிரம்பியவர் என்றால் இதற்கான நிரந்தர சிகிச்சை பற்றி யோசிக்கலாம். அதற்கு முன் சம்பந்தப்பட்ட நபரின் கருவிழி எப்படியிருக்கிறது, கண்களின் அமைப்பு எப்படியிருக்கிறது என்பதையெல்லாம் `கார்னியல் டோபோகிராபி’ (Corneal topography) என்ற பரிசோதனையின் மூலம் உறுதிசெய்ய வேண்டும்.

அதன் பிறகு எந்த வகையான லேசர் சிகிச்சை சரியாக இருக்கும் என்பது முடிவு செய்யப்படும். இந்தச் சிகிச்சைக்குப் பிறகு கண்ணாடி தேவையிருக்காது.

ஒருவேளை உங்கள் வயது 40 ப்ளஸ் என்றால், `ப்ரெஸ்பயோபியா’ (Presbyopia) என்ற பாதிப்பின் காரணமாக புத்தகம் படிப்பது, செல்போன் பார்ப்பதெல்லாம் சிரமமாக மாறும்.

கண்ணாடி தேவை யில்லை என்பதில் உறுதியாக இருக்கும்பட்சத்தில் `க்ளியர் லென்ஸ் எக்ஸ்ட்ராக்‌ஷன்’ (Clear Lens Extraction) என்ற சிகிச்சை அளித்து, `ட்ரைஃபோக்கல் இன்ட்ரா ஆகுலர் லென்ஸ்’ (Trifocal Intraocular Lens) பொருத்திக்கொண்டால், கண்ணாடி உதவியின்றி, தூரப்பார்வை, கம்ப்யூட்டரை பார்ப்பது, புத்தகம் படிப்பது என எல்லாம் தெளிவாகிவிடும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து சிகிச்சைகளும் கண் மருத்துவரை அணுகி, பார்வை பரிசோதனை மேற்கொண்ட பிறகு அவரது பரிந்துரையின் பேரில் முடிவு செய்யப்பட வேண்டியவை” என்று விளக்கமளித்தார். How to reduce eye strain naturally?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share