இளம் வயதில் பலருக்கும் முகத்தில் பருக்கள் வர முக்கிய காரணம்… சருமத்தில் கொழுப்பு அதிகமாக வெளியேறுதல், கிருமித் தொந்தரவு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, அதிகக் கொழுப்பு சேர்ந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதும் என்கிறார்கள் சருமநல மருத்துவர்கள்.
இந்த நிலையில், “பருக்களைக் கிள்ளுவது தவறு. நெருடாமல், தொடாமல் இருந்தால் பருக்கள் வடுவின்றித் தாமே மறைந்துவிடும். கிள்ளுவதால் அரைகுறையாகப் பழுத்த பருக்கட்டி உடைந்து, அதனால் சுற்றுப்புற அழற்சி அதிகமாகி முகமெல்லாம் வீங்கி, காய்ச்சல், கடும் வேதனை போன்றவை ஏற்பட்டுப் பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விடுவதும் உண்டு.
பருக்கள் அதிகம் வராமல் இருக்க… இனிப்புப் பண்டங்கள் அதிகமாகச் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளலாம். முக்கியமாக சாக்லேட், பாலேடு இனிப்புகளைத் தவிர்க்கலாம். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை லேசான மலமிளக்கிகளைச் சாப்பிடலாம்.
மேலும், துத்தி இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவிவரப் பருக்கள் மறையும். வெட்டி வேர் 100 கிராம், சந்தனத் தூள் 25 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள் மறையும்.
பாசிப்பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய்தூள் கலந்து சோப்புக்குப் பதில், தினசரிக் குளிக்கப் பயன்படுத்தினால் பரு மாறி முகம் ஒளி பெறும்.
சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகிய மூன்றையும் அரைத்துப் பற்று போட, பரு மறையும். மேலும், முகத்தில் தழும்புகள் அதிகம் இருந்தால் ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தடவி வரத் தழும்புகள் மறைந்து, முகம் பளபளப்பாக மாறிப் பொலிவு பெறும்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கேஷு தம் புலாவ்
பி.எஸ்.என்.எலையும் வித்துருவாங்களா? : அப்டேட் குமாரு
நான் ரவுடியா? நிரூபிக்கத் தயாரா? அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!
Bloody Criminal…புதினை கட்டியணைத்த மோடி : உக்ரைன் அதிபர் அதிருப்தி!