கோடையில் அதிகம் பரவக்கூடிய நோய்கள் பல. அவற்றில் முக்கியமானது அம்மை. அம்மை ஏற்பட்டவரை முதலில் தனிமைப்படுத்த வேண்டும். தற்போது அம்மைக்கு வைரஸ் கொல்லி மருந்துகள் உள்ளன. அதைக் கொடுப்பதன் மூலம் குறுகிய காலத்தில் சரியாகும்.
அடுத்து, சரியாக கொதிக்க வைக்காத நீரைக் குடிப்பது, அசுத்தமான ஹோட்டல்களில் உணவுகளை உண்பது, கைகளை கழுவாமல் உணவுகளை உண்பது போன்றவற்றால் ஹெபடைடிஸ் ஏ வைரஸ் பரவும். இதனால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு மஞ்சள் காமாலை வரும். மஞ்சள் காமாலை என்பது ஒரு அறிகுறி. அதற்கான காரணத்துக்கு ஏற்ப உடனே சிகிச்சை எடுக்க வேண்டும். நாட்டு மருந்துகளை உடனே எடுக்கக்கூடாது. ஏனெனில் மஞ்சள் காமாலை வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. எனவே மஞ்சள் காமாலை ஏற்பட்டால், அது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும்.
ஹெபடைடிஸ் ஏ தொற்றைத் தவிர்க்க நீரை நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்க வேண்டும், கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். இவற்றை மனதில் கொண்டால், தொற்றுகளில் இருந்து எளிதில் வெற்றி பெறலாம்.
உணவு சார்ந்த தொற்று நோயான ஃபுட் பாய்சன் கோடையில் பலரைத் தாக்கும். உணவை சரியாக பராமரிக்காதபோது, அதனால் கிருமி தொற்று என்னும் ஃபுட் பாய்சன் ஏற்படும். எனவே ஒரு நாளில் சமைத்த உணவை அன்றே சாப்பிட்டு விட வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசூரியன் நாடு: விடிய விடிய உல்லாசம்!
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: ஃபிரிட்ஜ்… எந்தப் பொருளை, எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம்?
KKR Vs SRH: மொகத்துக்கு நேரா ‘இப்படி’ பண்ணிட்டாரே… வைரலாகும் ‘கத்துக்குட்டி’ வீரரின் செயல்!
SRH vs KKR: இப்டித்தான் எங்களுக்கும் இருந்துச்சு… கம்மின்சை ‘சைலண்ட்’ ஆக்கிய ஷாரூக் டீம்!