பியூட்டி டிப்ஸ்: தோற்றத்தை மாற்றும் வெண் புள்ளிகள்… தடுப்பது எப்படி?

வெண்மை நிறத்தில் ஒழுங்கற்ற பல அளவுகளிலான புள்ளிகள், படைகளை ஏற்படுத்தி, தோற்றத்தில் மாறுபாட்டையும், அதன் மூலம் அதிகமான மனச் சஞ்சலத்தையும் தரக்கூடிய சரும பிரச்னைகளில் ஒன்று வெண்புள்ளி (Vitiligo) பாதிப்பு.

வெண்புள்ளிகள் வயது வரம்பின்றி யாரையும், எந்தப் பாலினத்தாரையும் தாக்கலாம். சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வரலாம்.

முதலில் உதடு, உள்ளங்கை, ஆசன வாய், பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் தோன்றும், சுட்ட புண் போன்ற நிறத்துடன் இருக்கும், சீக்கிரம் பரவும் வகை வெண்புள்ளிகள் எளிதில் தீராது.

ரோமம் வெளுக்காமலும், உடலைக் கையால் தடவ மேடு, பள்ளம் இல்லாமல் இருந்தாலும், சடைப் பின்னல் போலும், தீயால் சுட்டு ஆறிய வடுபோலும் இருக்கிற வெண்புள்ளிகள் தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த நிலையில் ஆரம்பகட்ட முறையான சிகிச்சையால், வெண்புள்ளிகள் தீவிரமடைவதைத் தாமதப்படுத்த முடியும். மேலும் பரவுவதைத் தடுக்க முடியும்.

ஆப்பிள், கேரட், பீன்ஸ், கொண்டைக்கடலை, அத்திப்பழம், பேரீச்சம்பழம் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

செவ்வாழை, மாதுளம் பழம், பப்பாளி, பொன்னாங்கண்ணி, வெந்தயம், சுரைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ ஆகியவற்றைப் போதுமான அளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கொய்யா, ஆரஞ்சு பழங்கள், எலுமிச்சை, கறுப்பு திராட்சை, புளி, புளிப்புப் பொருள்கள், மீன், கோழிக்கறி, முட்டை போன்றவற்றை முடிந்த அளவு உணவில் குறைக்க வேண்டும்.

மன அழுத்தத்தைக் குறைக்க, மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனப் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவை தவிர… மயில் துத்தத்தைக் குமட்டிக்காய்ச் சாற்றில் அரைத்துப் பூசலாம்.

மருதாணி இலைகளை அரைத்துப் பூச, நிற மாற்றத்தோடு, பாதிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் எரிச்சல் தணியும்; குளிர்ச்சி உண்டாகும்.

பூவரச மரத்தின், முதிர்ந்த பட்டையின் சதையைச் சிதைத்துப் பிழிந்த சாற்றை வாயிலிட்டு, வெண்புள்ளிகளில் படுமாறு தொடர்ந்து கொப்பளித்து வர அல்லது மேலே தடவ உதட்டில் வரும் வெண்புள்ளிகள் நீங்கும்.

கார்போகிப் பசையை தயிரில் அல்லது எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து மேலே தடவலாம்.

சித்த மருத்துவ மருந்தகங்களில் கிடைக்கும் துவரை வேர்க்குழித் தைலம், கார்போகி நெய் போன்ற வெளி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை, தக்க சித்த மருத்துவரின் ஆலோசனையின்படி, மேலே பூசி, சிறிது நேரம் காலை இளம் வெயிலில் நிற்பது மிகுந்த பயனை அளிக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இங்க மட்டும் கூட மாட்டேங்குது : அப்டேட் குமாரு

வினேஷ் போகத் தோற்கவில்லை… தோற்கடிக்கப்பட்டார் : பஜ்ரங் புனியா

வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி : மோடி, ராகுல் வாழ்த்து… பரிசு அறிவிப்பு!

சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் தாமதம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts