பியூட்டி டிப்ஸ்: கோடையில் பரவும் சொறி சிரங்கு… தடுப்பது எப்படி

Published On:

| By Kavi

கோடைக்காலத்தில் வரக்கூடிய, தோல் நோய்களில் முக்கியமானது சொறி சிரங்கு (Scabies). குழந்தைகளை மிக அதிகமாக பாதிக்கக்கூடியது என்பதோடு, ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மிக வேகமாகப் பரவக் கூடியது.

கண்ணுக்குப் புலப்படாத ஒட்டுண்ணிகளால் (Parasitic infection) இந்நோய் ஏற்படுகிறது இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகுவதாலும், அவர்களின் ஆடைகள், படுக்கை, தலையணைகள் இவற்றைப் பயன்படுத்துவதாலும் சுத்தம் மற்றும் சுகாதாரக் குறைவாலும் மற்றவருக்கு மிக எளிதில் பரவுகிறது.

எப்படித் தடுக்கலாம்?

சுய சுத்தம் [Personal hygiene] மிகவும் முக்கியம். தினமும் 2 வேளை, சுத்தமான நீரில், வியர்வை நீங்கக் குளிக்க வேண்டும்.

குளித்து முடித்தபின் ஈரம் நீங்க நன்கு துவட்டியபின், ஆடை அணிதல் வேண்டும். சுத்தமான, மெல்லிய, காற்று ஊடுருவக் கூடிய, பருத்தி ஆடைகள் (Cotton clothes) நல்லது.

நன்கு துவைத்து, வெயிலில் உலர வைத்த ஆடைகளையே அணிதல் வேண்டும். ஒருமுறை உபயோகித்த ஆடைகளைத் துவைக்காமல், திரும்ப உபயோகிக்கக் கூடாது. ஆடைகளை ஒருவருக்கொருவர் மாற்றி, அணிந்துகொள்ளும் பழக்கம் தவிர்க்கப்படல் வேண்டும்

உடல் வெப்பத்தை அதிகரிக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யோகாசனப் பயிற்சிகள் மற்றும் நல்ல தூக்கம் மிக அவசியம்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள்… குப்பை மேனியை உப்பு சேர்த்து அரைத்துப் பூசலாம்

கார்போகிப் பசையைப் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) புளித்த தயிரில் அல்லது தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பூசலாம்.

பிரம்மத்தண்டின் விதை, வசம்பு, மஞ்சள் ஆகியவற்றை அரைத்துப் பூசலாம்.

பேன்கொட்டை (காக்கைக்கொல்லி என்றும் சொல்வார்கள்) என்ற மருந்தைத் தேங்காய் எண்ணெயில் இழைத்து மேல் பூசக் கொப்புளங்கள் உடையும். அதற்குப் பிறகு கழுவிச் சுத்தம் செய்தபின், சிரங்குகளுக்கான மருந்துகளைப் பூசலாம்.

துவர்ப்புச் சுவை உடைய பட்டைகளின் குடிநீர், திரிபலா குடிநீர் போன்றவற்றைப் புண்களைக் கழுவப் பயன்படுத்தலாம்” என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : சில்லி பனீர்!

இங்க வடை, அங்க சப்பாத்தியா? அப்டேட் குமாரு

கருடன்: சூரி ஆக்சன் மிரட்டல்… ரிலீஸ் தேதி இதோ!

ஸ்ரீகாந்த்: விமர்சனம்!