பியூட்டி டிப்ஸ்: கூந்தல் வெடிப்பை தடுக்க என்ன செய்வது?

Published On:

| By Kavi

மாறிவரும் பருவ நிலையில் சூரிய ஒளி, தூசி, சுற்றுப்புறத் தூய்மையின்மை போன்ற காரணங்களால் தலைமுடி வறண்ட தன்மையை அடைந்து வெடிப்படையும். இதைத் தடுக்க…

வாரத்துக்கு இரண்டு முறை எண்ணெய் வைத்து தலைக்கு மசாஜ் செய்து. தலைக்கு குளிக்க வேண்டும்.

தலையில் அழுக்கு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

குளோரின் கலந்த நீரில் அதிகம் குளிப்பது தலைமுடியை வறட்சியடையச் செய்யும்.

தலைமுடியை சீவுவதற்கு தரமான சீப்பை பயன்படுத்தவும். தலை குளித்தவுடனேயே தலை சீவக்கூடாது. இதனால் முடி உடையும்.

தலைமுடிக்கு கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ பயன்படுத்த வேண்டாம். சிக்கு எடுக்க பெரிய பல் இருக்கும் சீப்பை பயன்படுத்த வேண்டும்.

தலைமுடியை ஸ்ட்ரெய்ட் செய்யும்போது தலைமுடி ஈரமாக இருக்க கூடாது. இது முடி வெடிப்புக்கு காரணமாகிவிடும்.

ஹேர் ட்ரையர் பயன்படுத்தும்போது அதிகம் சூடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தலைமுடியைப் பராமரிப்பது போலவே அதன் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும் சாப்பிட வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: உங்களுக்கேற்ற தலையணையில்தான் தூங்குகிறீர்களா?

எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்: அப்டேட் குமாரு

குரூப் 4 ஹால் டிக்கெட்: டவுன்லோட் செய்வது எப்படி?

சாமான்யன் – சாதித்தாரா? ராமராஜனின் புதிய பட வசூல் எவ்வளவு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel