பியூட்டி டிப்ஸ்: 40 ப்ளஸில் கொத்துக்கொத்தாக உதிரும் முடி… தீர்வு இதோ!

Published On:

| By Selvam

40 வயதுக்கு மேல் சிலருக்கு தலைமுடி உதிர்வு மிக அதிகமாக இருக்கும். தலையை சீவினாலே கொத்துக் கொத்தாக முடி கொட்டும். இப்படியே போனால், தலையில் பாதிக்கும் மேல் வழுக்கையாகி விடுமோ என பயப்படுவார்கள்.

இந்த முடி உதிர்வைக் கட்டுப்படுத்த ஊட்டச்சத்து ஆலோசகர்கள் சொல்லும் தீர்வுகள் இதோ…

வயதாக, ஆக நம் உடலில் கொலாஜென் உற்பத்தி குறையத் தொடங்கும். அதன் விளைவால் முடி வறண்டு, உயிரே இல்லாதது போல மாறும்.

போதிய அளவு புரதச்சத்து எடுத்துக் கொள்ளாதவர்களுக்கும் முடி உதிர்வு இருக்கும். முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் வைட்டமின் பி குடும்பத்தைச் சேர்ந்த பயோட்டின் சத்தும் மிக முக்கியம்.

அதற்காக அசைவம் சாப்பிடுவோர் என்றால், தினமும் ஒரு முழு முட்டை எடுத்துக்கொள்ளலாம். சைவ உணவுக்காரர்கள் என்றால், முளைகட்டிய பயறு வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.  

முடியின் ஆரோக்கியத்துக்கு கறிவேப்பிலை மிகப் பிரமாதமாக உதவும். கறிவேப்பிலையை சட்னியாக செய்து தினமும் சேர்த்துக் கொள்ளலாம். பத்து – பதினைந்து கறிவேப்பிலைகளை மோருடன் சேர்த்து அடித்தும் குடிக்கலாம். பொடியாக அரைத்து சாதத்தில் நெய் விட்டுப் பிசைந்தோ, இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொண்டோ சாப்பிடலாம்.

நெல்லிக்காயும் கூந்தலுக்கு நல்லது. தினமும் இரண்டு நெல்லிக்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்கலாம். அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம். பொரியல், கூட்டு, சூப் என ஏதேனும் ஒரு வடிவில் தினமும் ஒரு கீரை சேர்த்துக்கொள்ளலாம்.  

ஒருநாள் விட்டு ஒரு நாள் வெங்காய சூப் குடிக்கலாம். அது பிடிக்காதவர்கள், பரங்கிக்காய் சூப், வெங்காயம் – தக்காளி சூப் குடிக்கலாம். கேரட்- வெங்காயம் சூப்பும் குடிக்கலாம்.

தினமும் 3-4 பேரீச்சம் பழங்களும், 2 அத்திப்பழங்களும் எடுத்துக்கொள்வது இரும்புச்சத்துக் குறைபாட்டை சரியாக்கி, முடி உதிர்வை நிறுத்தும்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு சப்பாத்தி

இதெல்லாம் வெளியில சொன்னா சிரிச்சிருவாங்க… அப்டேட் குமாரு

குடிநீரில் கலந்த கழிவுநீர்… 2 பேர் பலி… சென்னையில் சோகம்!

விமர்சனம்: புஷ்பா 2 !

பொன்முடி மீது சேற்றை வாரி வீசியதை ஏற்க முடியாது : ராமதாஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share