உயிர் காக்கும் ஹெல்மெட் அணிவது அவசியம் என்கிற நிலையில் இன்னொரு பக்கம், ஹெல்மெட் அணிவதால் முடியின் வேர்ப்பகுதியில் ஏற்படும் பாதிப்பு முடி உதிர்வு வரை தொடர்கிறது. இதனால் அழகு பாதிக்கப்படுகிறது என்கிற நிலையில் இதைத் தவிர்க்க…
ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் முடி உதிர்வைத் தவிர்க்க முதலில் கவனிக்க வேண்டியது ஹெல்மெட் பராமரிப்புதான். ஹெல்மெட்டை வண்டியின் அடியில் வைப்பது, மேஜையின் மீது வைப்பது, கப்போர்டில் வைப்பது எனக் காற்றோட்டம் இல்லாமல் வைக்காமல் அதைத் திறந்தவெளியில், வெளிச்சம், காற்றுபடும் வகையில் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் அதில் கிருமி சேராமலும், அந்தக் கிருமிகளால் மயிர்க்கால் பகுதியில் அரிப்பு, கேச வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படாமலும் தடுக்கலாம். Prevent Hair Loss from Helmet
அடுத்ததாக வாரத்துக்கு ஒரு முறையாவது ஹெல்மெட்டை துடைத்து, சானிடைசர் அல்லது டிஸ்இன்ஃபெக்டன்ட் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் கேசத்தின் வேர்ப்பகுதி தூசு, அழுக்கால் பலவீனமடைவதைத் தவிர்க்க முடியும்.
ஹெல்மெட்டை பயன்படுத்தும்போது, கேசத்தில் இருந்து பொடுகு, எண்ணெய்ப்பசை போன்றவை ஹெல்மெட்டில் சேராமல் இருக்க, கேசத்தை சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். எனவே, ஹெல்மெட்டை மட்டுமே குறை கூறாமல் அதைப் பயன்படுத்துபவரின் கேச சுகாதாரமும் பேணப்பட வேண்டும். Prevent Hair Loss from Helmet
கேசத்தைச் சுத்தமாகப் பராமரிப்பதுடன், கேசத்தில் காட்டன் துணியையோ, ஷாலையோ அணிந்த பின்னர் ஹெல்மெட்டை அணிய வேண்டும். மேலே குறிப்பிட்டது போல துணியைப் பயன்படுத்தும்போது ஹெல்மெட்டால் தலையில் உண்டாகும் வியர்வை உறிஞ்சப்படும்.
ஹெல்மெட்டைப் பயன்படுத்தும் பெண்கள் ரொம்ப டைட்டாக போனிடெய்ல், பின்னல், கொண்டை போடுவதைத் தவிர்க்க வேண்டும். கேசத்தை முழுவதுமாக ஃபிரீயாக விடுவதும் வேண்டாம். மொத்த கேசத்தையும் ஒன்றாக இணைத்து, தளர்வாக பேண்ட் போட்டுக்கொண்டு, காட்டன் துணியை அணிந்து, ஹெல்மெட் அணிவது நல்லது என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.