ஹெல்த் டிப்ஸ்: குளிர்காலத்தில் ஏற்படும் முகவாதம்: தப்பிக்க என்ன வழி?

Published On:

| By Kavi

குளிர் காலங்களில் வயது முதிர்ந்தவர்களுக்கும், மத்திய வயதினரில் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் இருப்பவர்களுக்கும் திடீரென்று வாயைக் குவிக்க முடியாது. உதடு ஒரு பக்கமாக இழுத்துக்கொள்ளும். ஒரு பக்க கண்ணை முழுமையாக மூட முடியாது. எச்சில் வடியும், சரியாகப் பேச இயலாமல் வாய் குளறும். இதையே முகவாதம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பக்கவாதம் என்பது, மூளையின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு அதனால் மூளையின் சில பகுதிகள் ரத்த ஓட்டம் இல்லாமல் ஸ்தம்பிக்கும் நிலை.

அவ்வாறு ஏற்படும்போது ஒரு பக்க கை, கால் அல்லது இரு பக்க கை, கால் செயல்திறன் குறைவது, செயலிழந்து போவது, கூடவே பேச்சு வராமல் போவது போன்ற விளைவுகள் ஏற்படும்.

முகவாதம் என்பது, முகத்தில் உள்ள தசைகளுக்கு உணர்வூட்டும் முக நரம்பில் உள்காயம் ஏற்படுவது, வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது போன்றவற்றால் ஏற்படும் பிரச்சினை. இதைத் தவிர்க்க…

“வீட்டில் உறங்கும்போதுகூட, ஜன்னல் வழி வரும் குளிர்ந்த காற்று நேரடியாக முகத்தில் படும் வகையில் படுப்பதை தவிர்க்க வேண்டும்.

ஏ.சியின் குளிர் காற்றும் நேரடியாக முகத்தில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மிகக் கடினமான தலையணை உபயோகிப்பதைத் தவிர்த்து, லேசான தலையணை உபயோகிப்பது நல்லது.

பேருந்து, ரயில் பயணங்களில் குளிர்ந்த வாடைக் காற்று அதிக நேரம் காதுகள் மற்றும் கன்னப்பகுதியில் படும் வகையில் ஜன்னலோரம் அமரக் கூடாது.

அப்படி முகவாதம் ஏற்பட்டால்… உணவை மெதுவாகச் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் ஆனாலும் பரவாயில்லை. வேகமாகச் சாப்பிட நினைத்தால் புரையேறும், இருமல் வரும். எளிதாக மென்று விழுங்கக் கூடிய அளவில் சிறிய சிறிய கவளங்களாக உட்கொள்ள வேண்டும்.

உணவானது முழு திட உணவாகவோ, முழு திரவ உணவாகவோ இல்லாமல் கரைத்த கஞ்சியாக உண்பது சிறந்தது.

தண்ணீர் பருகும்போதும் எந்த கவனச் சிதறலும் இல்லாமல்  பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை பாட்டிலில் பருகுவதை தவிர்த்துவிட்டு சிறிய கோப்பையில் சிறுகச் சிறுகப் பருகுவது நல்லது.

வெந்நீர் ஒத்தடம் மற்றும் மசாஜ் உடன் ஃபிசியோதெரபி அவசியம். மனதை தளரவிடாமல் மருத்துவ முறைகளை சரிவரக் கடைப்பிடித்தால் போதும்… சில வாரங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்” என்று அறிவுறுத்துகிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தம்பிதுரை பேசியது இதுதான்: ஸ்டாலின் மீது எடப்பாடி தாக்கு!

சஸ்பெண்ட் ஆனாலும்… உதயநிதியை விடாத ஆதவ் அர்ஜுனா

டங்ஸ்டன் சுரங்கத்தை ஆதரித்தேனா?: டெல்லியில் தம்பிதுரை பேட்டி!

சஞ்சய் மல்ஹோத்ரா: ரிசர்வ் வங்கி புதிய ஆளுநராக நியமனம்!

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : பெற்றோர் அதிர்ச்சி!

ஹிஸ்புல்லா வீக், ஈரான் அவுட், உக்ரேனில் ரஷ்யா பிஸி; ஸ்கெட்ச் போட்டு சிரியாவை கைப்பற்றிய ஜோலானி – முழு விவரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share