பியூட்டி டிப்ஸ்: பாத வெடிப்பு… வரும்முன் தவிர்ப்பது எப்படி?

டிரெண்டிங்

பெரும்பாலானவர்களுக்கு கால் பாதங்களை பாதிக்கக்கூடிய பெரும் பிரச்னையாக இருப்பது பித்த வெடிப்பு அல்லது பாத வெடிப்பு. இந்த வெடிப்பு எந்தப் பாலினத்தவரையும் பாதிக்கலாம்..

நம் உடலில் நீர்ச்சத்து வெகுவாகக் குறைதல் மற்றும் வெகு அதிகமான குளிர்ச்சி காரணமாக தோல் வறட்சி அடைதல், அதிக உடல் எடை… அதனால் பாதங்களுக்கு அளவுக்கு அதிகமான அழுத்தம் ஏற்படுதல், வெறும் கால்களுடன் கரடுமுரடான தரைகளில் நடத்தல், எந்நேரமும் உப்புத் தண்ணீரில் கால்கள் நனைதல், நீண்ட நேரம் கால்கள் நீரிலேயே இருத்தல், நீண்ட நேரம் நிற்றல் போன்ற காரணங்களால் பாத வெடிப்பு ஏற்படும்.

பாத வெடிப்பு வராமல் தடுக்க… முகத்தையும், சருமத்தையும் பாதுகாப்பது போல், பாதங்களையும் நாம் பாதுகாக்க வேண்டும்.

தினமும் குளிக்கும்போது, கால் பாதங்களையும் நன்கு சுத்தப்படுத்த வேண்டும். ஸ்கிரப்பர் கொண்டு பாதங்களைத் தேய்த்து வந்தால், இறந்த செல்கள் நீங்கி, புத்துணர்ச்சி உண்டாகும்.

வெதுவெதுப்பான நீரில் தினம் இருமுறை பாதங்களைக் கழுவலாம். முக்கியமாக பாதங்களை அழுக்கில்லாமல், எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் அவசியம்.

மேலும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுதல், நிறைய தண்ணீர் குடித்தல், இளநீர், நுங்கு, தர்பூசணி, வைட்டமின் ஏ நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளுதல் முக்கியம்.

பாத வெடிப்பு பிரச்சினை ஆரம்பகட்டத்தில் இருக்கிறது என்றால், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றைத் தடவி, பாதங்களை மசாஜ் செய்யலாம்.

கற்றாழை ஜெல், தேன், மருதாணி இலைகளைச் சிறிது எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்த கலவை, மருதாணிப் பொடியுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்த கலவை, பப்பாளிப் பழக்கூழுடன் மஞ்சள் தூள் சேர்த்த கலவை,

மசித்த பப்பாளியுடன் எலுமிச்சைப்பழச்சாறு சேர்த்த கலவை, வேப்பிலை, மஞ்சள் இவற்றைச் சேர்த்தரைத்த கலவை… இவற்றில் ஏதாவது ஒன்றைத் தடவலாம். கால்களைக் கழுவத் திரிபலா கஷாயத்தைப் பயன்படுத்தலாம்.

வெடிப்புகள் அதிகம் இருந்தால், ஸ்கிரப் செய்யக்கூடாது. மிகவும் கடினமான காலணிகள், பொருத்தமற்ற காலணிகள் அணிவதை, நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்கலாம். வலிக்கிறது என்பதற்காக பாதங்களின் இறந்த சருமத்தை பிளேடு கொண்டு அகற்றக் கூடாது.

முக்கியமாக… சர்க்கரை நோயாளிகள் பாதப் பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து, தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோடி ஜி கோவில்: அப்டேட் குமாரு

தோனி ஓய்வா? CSK-வின் காசி விஸ்வநாதன் சொன்ன புதிய தகவல்!

வள்ளுவருக்கு காவி… ஆளுநர் இப்படி செய்யலாமா? – செல்வப்பெருந்தகை காட்டம்!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *