பியூட்டி டிப்ஸ்: இளநரையை தடுப்பது எப்படி?

டிரெண்டிங்

இந்தியாவைப் பொறுத்தவரை இளநரை என்பது 25 வயதுக்குள் ஏற்படும் கேசத்தின் நிற மாற்றம் ஆகும். இதற்கு மரபணு மிக முக்கியக் காரணமாக இருந்தாலும், சத்துக் குறைபாடு, மன அழுத்தம் மற்றும் மிக முக்கியமாக புகைப்பழக்கம் ஆகியவை இளநரை ஏற்படுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

மரபு காரணத்தைப் பொறுத்தவரை, பெற்றோர்களுக்கு இளநரை இருந்தால் குழந்தைகளுக்கும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சில குழந்தைகள் பிறக்கும்போதேகூட நரையுடன் பிறப்பதும் நடக்கும். வெளிப்புறக் காரணிகளில் சூரியனின் புற ஊதாக் கதிர்களின் தாக்கம், காற்று மாசுபாடு போன்றவையும் இளநரையை ஏற்படுத்தலாம்.

சத்துக்குறைபாடு, புறக்காரணிகள் எனச் சில காரணங்களால் ஏற்படும் இளநரையை மட்டுமே சிகிச்சை மூலம் சரிசெய்ய இயலும். மரபு உள்ளிட்ட மற்ற காரணங்களால் ஏற்படுவதை சரிசெய்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே வீட்டு மருத்துவம், கை வைத்தியமும் அதற்கு பலன் தராது என்பதால் முயற்சி செய்ய வேண்டாம். சிலருக்கு இளநரையைக் குறைப்பதற்கும், அதிகமாகாமல் பார்த்துக்கொள்வதற்கும் சிகிச்சையளிக்க இயலும்.

இளநரை ஏற்படும்போது ஆரம்பக் காலக்கட்டத்திலேயே மருத்துவரிடம் செல்ல வேண்டும். தேவையான ரத்தம் மற்றும் பிற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். காரணம் கண்டறியப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ளப்படும். சரிசெய்யக்கூடிய இளநரைக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சையுடன் பின்வருபவை கைகொடுக்கும்….

காப்பர், ஜிங்க், புரதம் மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வெயில், காற்று, மாசுகளில் இருந்து கேசத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். புகைப்பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக அதை நிறுத்த வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தெலங்கானாவில் வெற்றி வாகை சூடப்போவது யார்?

சண்டே ஸ்பெஷல்: எடையைக் குறைக்க நினைப்போர் குறைவாகச் சாப்பிட வேண்டுமா?

பிரேக்கிங் புயல் எப்ப கரையை கடக்குமோ? அப்டேட் குமாரு

வியூகம் வகுத்த விஜிலென்ஸ் இயக்குனர் அபய்குமார்… அமலாக்கத் துறைக்கு ’அபாய’ குமார்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *