கோடையில் பலர் தினமும் இரு வேளைகள் குளிப்பார்கள். ஆனாலும் உடலில் வியர்வை வாடை வீசும். எவ்வளவு வாசனையான சோப் பயன்படுத்தினாலும், பெர்ஃபியூம் உபயோகித்தாலும் அதையும் தாண்டி வியர்வை வாடை வீசும். இதற்கு என்ன காரணம்? வியர்வை வாடை இல்லாமல் வலம் வருவது எப்படி?
இந்தப் பிரச்சினையை `ஸ்வெட் ரிட்டென்ஷன் டெர்மடைட்டிஸ்’ (sweat retention dermatitis) என்று சொல்கிறார்கள் சருமநல மருத்துவர்கள். “காட்டன் துணிகள் அணியும்போது வியர்வை உறிஞ்சப்படும். மாறாக சிந்தெடிக் உடைகள் அணியும்போது வியர்வை உறிஞ்சப்படாமல் இருப்பதால், சருமத்தில் நீண்ட நேரம் இருக்கிறது. அதனால்தான் பாக்டீரியா தொற்று வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
வியர்வை வாடை வருபவர்கள், வாசனை சோப் உபயோகிப்பதற்குப் பதிலாக ஆன்டி பாக்டீரியல் சோப் பயன்படுத்தத் தொடங்கலாம். வியர்வை வாடையைத் தவிர்க்க, ரோல் ஆன் அல்லது டியோடரன்ட் உபயோகிப்பது சரியானதல்ல. அவற்றுக்குப் பதில் ஆன்டி பாக்டீரியல் அல்லது ஆன்டி ஃபங்கல் பவுடர் உபயோகிக்கலாம். இவற்றை உபயோகிக்கும்போது உடலில் வியர்வை தேங்காமல் சருமம் ஈரப்பதமின்றி இருக்கும்.மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் உடை. காற்றோட்டமுள்ள, தளர்வான, காட்டன் உடைகளையே அணிய வேண்டும். தினமும் இருவேளைகள் குளிக்க வேண்டும். குளிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் உங்கள் உடைகள், உள்ளாடைகளை மாற்ற வேண்டியதும் முக்கியம்.
இவற்றையெல்லாம் செய்தும் கட்டுப்படாத வியர்வை என்றால் போடாக்ஸ் சிகிச்சை பலனளிக்கலாம். உள்ளங்கை, அக்குள், பாதம் என உடலின் எந்தப் பகுதியில் அதிக வியர்வை இருக்கிறதோ, அங்கு போடாக்ஸ் சிகிச்சை கொடுக்கப்படும். சரும மருத்துவரை அணுகினால், இந்தப் பிரச்சினையை முழுமையாக ஆராய்ந்து, அதற்கான காரணம் அறிந்து, தேவையான சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
உதயசூரியன் நாடு: விடிய விடிய உல்லாசம்!
பிரச்சாரம் ஆரம்பம்… ஸ்டாலின் உற்சாகம்!
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: ஃபிரிட்ஜ்… எந்தப் பொருளை, எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம்?