பருவநிலை மாறும்போது உணவு முதல் உடை வரை வாழ்க்கை முறையையும் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது அவசியமாகிறது.
குறிப்பாக, நம் சருமத்தையும் அந்தப் பருவநிலைக்கேற்ப பராமரித்து பாதுகாப்பது முக்கியம். இல்லையெனில் பருக்கள், அரிப்பு, தேமல் போன்ற சருமப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். தற்போது மாறிவரும் பருவநிலைக்கேற்ப உங்களை அழகாக்கிக் கொள்வது எப்படி?
வெளியில் சென்றுவிட்டு வந்தால் அவசியம் முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு சுத்தப்படுத்துங்கள். சுத்தம் செய்த பிறகு, முகத்தை உலர வைத்த துண்டால் ஒற்றி எடுங்கள். முகத்தை உங்கள் துண்டுடன் தேய்ப்பதைத் தவிருங்கள்.
ஃப்ரெஷாக இருக்கும் கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவி காய்ந்ததும் கழுவுங்கள். இது பல வகையான நன்மைகளை உங்கள் சருமத்துக்கு அளிக்கும்.
சன்ஸ்கிரீன் கோடைக்காலத்துக்கு மட்டுமல்ல. பருவநிலை மாற்றம் ஏற்படும் நாட்களிலும் பயன்படுத்துவது நல்லது.
படுக்கைக்குச் செல்வதற்கு முன் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது இரவு முழுவதும் உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும், மேலும், எழுந்தவுடன் உங்கள் சருமம் சமநிலையாகவும் மென்மையாகவும் இருக்கும்
என்னதான் வெளிப்புறத்தில் ஃபேஸ் பேக்குகளெல்லாம் அப்ளை செய்தாலும் சாப்பிடும் உணவு மிக மிக அவசியம். அதுவும் உங்கள் சருமத்தை பாதுகாக்க 50 சதவிகிதம் உதவி செய்கிறது.
எனவே, வைட்டமின் ஈ சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். பருவநிலை பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிடுங்கள்.
பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகள் சாப்பிடுங்கள். அதிக சர்க்கரை கலந்த ஜூஸ், ஸ்வீட் வகைகளை தவிருங்கள். எண்ணெய் உணவுகளையும் தவிர்ப்பது சருமத்துக்கு நல்லது.
சருமக் குறிப்புகள், உணவு மட்டும் உங்கள் அழகை பாதுகாக்க போதாது. மனதையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம்.
எனவே மனதை காயப்படுத்தும் எந்த விஷயங்களையும் நீண்ட நேரம் சிந்திக்காதீர்கள். பிரச்சினைகளை அவ்வப்போதே முடித்துவிடுங்கள். சிந்தனைகள், எண்ணங்களை பாசிட்டிவாக மாற்றுங்கள்.
தினம் 15 நிமிடங்களாவது உங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்யுங்கள். இதனால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். சருமம் ஆரோக்கியமாக மிளிரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: வேர்கடலை லட்டு!
ஆட்டத்துக்கு நாங்களும் வரலாமா? அப்டேட் குமாரு
ஜெகந்நாதர் கோவில் சர்ச்சை: தமிழர்களை அவமதிக்கும் மோடி… ஸ்டாலின் காட்டம்!
4 கோடி விவகாரம்… எஸ்.ஆர். சேகரிடம் 2 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை- நடந்தது என்ன?