கிச்சன் கீர்த்தனா: புதுச்சேரி இறால் குழம்பு!

Published On:

| By Kavi

புதுச்சேரி சென்று இந்த இறால் குழம்பை ருசித்தவர்கள், மீண்டும் எப்போது புதுச்சேரி செல்வோம்… இந்தக் குழம்பை ருசிப்போம் என்று நினைப்பார்கள். இப்படி நினைப்பவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய இந்த இறால் குழம்பை உங்கள் வீட்டிலேயே வைக்க இந்த ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

இறால் – கால் கிலோ
காய்ந்த மிளகாய் – 6 (இரண்டாக உடைத்துக் கொள்ளவும்) + 2 (தாளிக்க)
தேங்காய் – கால் மூடி (துருவிக் கொள்ளவும்)
சின்ன வெங்காயம் – 50 கிராம் (இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைப்பழம் – ஒன்று (மீடியம் சைஸ்)

எப்படிச் செய்வது?

காய்ந்த மிளகாய், தேங்காய், ஒரு டீஸ்பூன் சீரகத்தை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் மீதம் இருக்கும் சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும். இதில் மஞ்சள் தூள், இறால், தேவையான அளவு தண்ணீர், உப்பு போட்டு சிம்மில் வைத்து வேக விடவும். இறால் வெந்ததும் எலுமிச்சைச் சாறு பிழிந்து இறக்கி, மூடி வைத்து பிறகு பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கறிவேப்பிலைக் குழம்பு!

கிச்சன் கீர்த்தனா சண்டே ஸ்பெஷல்: உயிருள்ள ஊறுகாய் பற்றி தெரியுமா உங்களுக்கு?

டிஜிட்டல் திண்ணை: பொன்னார், நயினார், வானதி புறக்கணிப்பு- அண்ணாமலை கூட்டத்தில் நடந்தது என்ன?

எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share