தலைமுடிக்குப் பிரச்சினையே தராத ஷாம்பூவைத்தான் எல்லாரும் விரும்புவார்கள். அப்படியான ஒரு ஷாம்பூவை வீட்டிலேயே எளிமையாகத் தயாரித்துப் பயன்படுத்தலாம்… எப்படி?
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். அதை நன்கு சூடாக்கி எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் எல்.எல்.இ.எஸ் (SLES – Sodium laureth sulfate – ஆன்லைனில் அல்லது டிபார்ட்மென்ட்டல் கடைகளில் கிடைக்கும்) ஷாம்பூ பேஸ் (Shampoo Base)-ஐ 50 மில்லி அளவுக்கு எடுத்து, சூடான தண்ணீரில் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். இதனை அப்படியே குளிர விடுங்கள்.
கலவை குளிர்ந்ததும், அதில் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய், ஒரு டீஸ்பூன் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், எட்டு சொட்டுகள் மல்லிகைப் பூ எசென்ஷியல் ஆயில் (ரோஸ்/லேவண்டர் ஆகியவற்றின் எசென்ஷியல் எண்ணெய்களையும் சேர்க்கலாம்) ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்குங்கள். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அடித்து எடுங்கள். அவ்வளவுதான்… ஹோம்மேடு ஷாம்பூ ரெடி.
இதைத் தலைக்கு மட்டுமல்லாமல், பாடி வாஷாகவும் பயன்படுத்தலாம். ஒரு வாரம் முதல் 10 நாள்கள் வரைக்கும் இதை வெளியில் வைத்துப் பயன்படுத்தலாம். ஃபிரிட்ஜில் வைத்து 15 நாள்கள் வரை பயன்படுத்தலாம். அவ்வப்போது தேவையான அளவு தயாரித்தும் பயன்படுத்தலாம்.
எல்லாவிதமான முடி மற்றும் ஸ்கால்ப்புக்கும் இந்த ஷாம்பூ ஏற்றதாக இருக்கும். கேசத்தில் ஏதாவது பிரச்சினைகள் இருந்து அதற்கான சிகிச்சைக்குப் பிரத்யேக ஷாம்பூ பயன்படுத்த வேண்டியிருப்பவர்கள், அவற்றை நாடலாம். மற்றவர்கள், இதை வழக்கமாகப் பயன்படுத்தலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு… ஐ.பெரியசாமி மேல்முறையீடு: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
இனி விளையாடிக் கொண்டே வேலை தேடலாம்!
மாம்பழம் இனிக்குமா? புளிக்குமா? – அப்டேட் குமாரு
சங்கரராமன் கொலை வழக்கு: நீதிபதியின் பணி நீக்கத்தை உறுதி செய்த உயர் நீதிமன்றம்!