பியூட்டி டிப்ஸ்: வீட்டிலேயே ஹேர் டை செய்து கொள்ளலாம்… எப்படி?

Published On:

| By Minnambalam Desk

How to make natural hair dye?

“இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே ஹேர் டையிங் செய்து கொள்ள முடியும். ஆனால், ரெடிமேட் ஹேர் டை பாக்கெட்கள் கொண்டு செய்யப்படுவது போல, இது ஓரிரு மணி நேரத்தில் முடிவது அல்ல. இரண்டு நாட்கள் கேசப் பூச்சு பூச வேண்டும்.

ஆம்… முதல் நாள், கடைகளில் கிடைக்கும் மருதாணி பவுடரை வாங்கி, தண்ணீரில் குழைத்து, முடியின் வேர்க்கால்களில் இருந்து நுனிவரை படும்படி அப்ளை செய்ய வேண்டும். பிறகு மைல்ட் ஷாம்பூ பயன்படுத்தி சாதாரண தண்ணீரில் கேசத்தை அலச வேண்டும். How to make natural hair dye?

இரண்டாவது நாள், அவுரி பொடியை தண்ணீரில் குழைத்து கேசத்தில் தடவி அலச வேண்டும். இந்தப் பொடி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இப்படிச் செய்யும்போது, கேசத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும். இதில் ரசாயனங்கள் எதுவும் இல்லாததால் பக்கவிளைவுகள் ஏற்படாது.

ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதால் அலர்ஜி ஏற்படுபவர்களும், சென்சிட்டிவான சருமம் உள்ளவர்களும் இந்த முறையைப் பயன்படுத்தி கேசத்தை கலர் செய்யலாம். இயற்கை முறையை செயல்படுத்துவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் என்பதாலேயே பலரும் ரெடிமேட் ஹேர் டை பக்கம் திரும்பி விடுகின்றனர்.

இயற்கை முறையில் இருக்கக்கூடிய ஆரோக்கியம் சார்ந்த பாசிட்டிவ் விஷயங்களை கவனிக்க மறக்கின்றனர்” என்கிறார் அழகுக்கலை நிபுணர்கள்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share