சருமத்தைப் பொலிவுறச் செய்யும் நலங்கு மாவு பெரும்பாலான கடைகளில் கிடைக்கிறது என்றாலும், அது 100 விழுக்காடு சுத்தமானது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அதுவே தேவையான பொருட்களை நாமே பார்த்துப் பார்த்து வாங்கி நலங்கு மாவு தயாரிக்கும் வழிமுறைகள் மற்றும் அதைப் பயன்படுத்தும் விதம் குறித்த ஆலோசனைகளை வழங்குகிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
பச்சைப்பயற்று மாவு
கடலை மாவு
கோரைக்கிழங்குப் பொடி
வெட்டிவேர்ப் பொடி
ரோஜா இதழ்கள் பொடி
கார்போக அரிசிப் பொடி
கஸ்தூரி மஞ்சள் பொடி
துளசிப் பொடி
ஓமம் பொடி
ஆரஞ்சுத்தோல் பொடி
பூலாங்கிழங்குப் பொடி
வேப்பிலைத்தூள்
சந்தனத்தூள்
கிச்சிலிக்கிழங்குப் பொடி
நெல்லிக்காய்ப் பொடி (விருப்பப்பட்டால் இதை நலங்கு மாவில் சேர்த்துக் கொள்ளலாம். வைட்டமின் சி இருப்பதால் சருமத்தின் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும்).
மேற்சொன்ன எல்லா பொருள்களையும் தனித்தனியாக நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கி, காயவைத்துப் பொடியாக அரைக்கலாம் அல்லது நாட்டு மருந்துக் கடைகள்/சித்த மருந்துக் கடைகளில் தனித்தனிப் பொடியாகவே இவை கிடைக்கின்றன, வாங்கிக் கொள்ளலாம். ஒரு கிண்ணத்தில் கடலை மாவையும் பச்சைப் பயற்று மாவையும் தலா 15 கிராம் எடுத்து நன்கு கலந்துகொள்ளவும். இவற்றுடன் மற்ற அனைத்துப் பொருள்களின் பொடியையும் தலா ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கவும். நலங்கு மாவு தயார்.
தேவையான நல்லெண்ணெயை (தேங்காய் எண்ணெய்கூட ஓகேதான்) லேசாகச் சூடுபடுத்தி உடல் முழுவதும் தேய்க்கவும். 15 – 30 நிமிடங்கள் வரை அப்படியே ஊறவிடவும். தேவையான நலங்கு மாவை (நான்கைந்து டேபிள்ஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம்) எடுத்து, கொஞ்சம் தண்ணீரைச் சேர்க்கவும். இதைத் தொட்டுத் தொட்டு எடுத்து உடல் முழுவதும் ஸ்கிரப் செய்து, தண்ணீர் ஊற்றிக் குளியலை முடிக்கவும். பளபளக்கும் உங்கள் சருமத்தைப் பார்த்து நீங்களே அசந்துபோவீர்கள்
10 வயது முதல் நலங்கு மாவைப் பயன்படுத்தத் தொடங்கலாம். ஆனால், நலங்கு மாவை எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போதுதான் பயன்படுத்த வேண்டும். நார்மலாகக் குளிக்கும்போது இதைப் பயன்படுத்தினால் சருமம் மிகவும் உலர்ந்துபோய்விடும். அதேபோல நலங்கு மாவில் உள்ள பொருட்கள் சற்றுக் கடுமையான (strong ingredients) தன்மையுடன் இருப்பதால், இதை முகத்திற்குப் போடக்கூடாது. ஒரு பாடி ஸ்க்ரப்பர் (Body Scrubber) போல பயன்படுத்துவதே சரியானது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : இந்து மக்கள் கட்சி உண்ணாவிரத போராட்டம் முதல் இறுதிக்கட்டத்தில் சிட்னி டெஸ்ட் வரை!
அறிவிக்கப்படாத எமர்ஜென்சியா? : கே.பாலகிருஷ்ணனுக்கு சேகர்பாபு பதிலடி!
பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!
தூங்காத துரைமுருகன்… இரவில் சென்ற ரிப்போர்ட்! கல்லூரியில் தொடரும் ரெய்டு!
6 மணி நேர காத்திருப்பு… 11 மணி நேர சோதனை : அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடந்த ED ரெய்டு நிறைவு!
தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியா? – ஸ்டாலினுக்கு பாலகிருஷ்ணன் அதிரடி கேள்வி!