அவசர யுகத்தில் மெஹந்திக்கு வைத்துக்கொள்ள ஆசையிருந்தாலும் மருதாணி இலைகளை பறிக்கவோ, அரைக்கவோ பலருக்கும் நேரமில்லை. பெரும்பாலும் மெஹந்தி கோன்களையே பயன்படுத்துகிறோம்.
திருமணம், விழாக்கள், நிகழ்ச்சிகள் என எதுவாக இருந்தாலும் புதுப்புது டிசைன்களில், கை நிறைய நிறைய அழகாக மெஹந்தி வைத்துக் கொள்கிறோம்.
ஆனால் சிலருக்கு, மெஹந்தி நன்றாக சிவப்பாகவில்லை என்றும், சிலருக்கு ரொம்ப டார்க்காக உள்ளது என்றும் குறைகள் ஏற்படுவதுண்டு. இதனை எப்படி சரி செய்வது, சரியான நிறத்தில் மெஹந்தியை சிவக்க வைப்பது எப்படி?
கை நிறைய மெஹந்தி வைத்து முடித்த பின்னர், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, 20 முதல் 25 கிராம்புகளைச் சேர்க்கவும். அதனை நன்றாக நிறம் மாறும் வரை வறுத்துக்கொள்ளவும்.
பின்னர், அதிலிருந்து வெளிவரும் ஆவியின் மீது மெஹந்தி வைத்த கைகளை சில நிமிடங்கள் காட்டவும். இது மெஹந்தி சரியான அளவில் சிவப்பதற்கு உதவும்.
மெஹந்தி வைத்து சிறிது நேரத்தில் உதிரத் தொடங்கும். இதனாலும் மெஹந்தி சரியாக கைகளில் ஒட்டாமல் அங்கங்கே நிறம் குறைந்தது போன்றும், சில இடங்களில் மட்டும் சரியாக இருப்பது போன்றும் இருக்கும். இதைத் தவிர்க்க, மெஹந்தி காய்ந்து விடாமல் இருக்கக் கைகொடுக்கும் சர்க்கரை – எலுமிச்சை கரைசலை (sugar sealant) கைகளில் ஸ்பிரே செய்து கொள்ளவும்.
மெகந்தியை அகற்றிய பின்னர், அதன் மேல் Aftercare oil அப்ளை செய்து கொள்ளவும். அதன்பின் ஒரு மணி நேரத்திற்கு தண்ணீரில் படாமல் பார்த்து கொள்ளவும். Aftercare ஆயில் இல்லையென்றால் வீட்டிலிருக்கும் தைலம் ஏதாவது எடுத்து மெஹந்தி மீது அப்ளை செய்து, ஒரு மணி நேரம் தண்ணீர் படாமல் வைத்திருந்து கழுவவும்.
சாதாரண surgical tape எடுத்துக்கொள்ளவும். மெஹந்தி போடப்பட்ட சிறிது நேரத்திற்கு பின்னர், அதன் மீது டேப்பை ஒட்டவும். இதனால், மெகந்தி கலையாமல் டிசைன் அப்படியே இருக்கும். டேப்பை மெகந்தியை எடுக்கும் நேரம் வரை அப்படியே வைத்திருக்கவும். மெஹந்தி காய்ந்ததும் டேப்பை எடுத்தால் மெஹந்தியும் வந்துவிடும்.
மேற்கூறிய டிப்ஸ் மெஹந்தி செக்கச்சிவந்த நிறத்தில் பிடிக்க உதவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : ஜவ்வரிசி கிச்சடி
டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை மையம்!
19 வயது இந்திய அணியில் 13 வயது குட்டீஸ்… யாரப்பா இந்த கில்லி?
சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? – எடப்பாடி பதில்!