நரைத்த கேசத்தை கருமையாக்க பலரும் ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். இன்னொரு பக்கம், இளைஞர்கள் மத்தியில் ஹேர் கலரிங் மிகவும் பிரபலமடைந்துள்ளது. ஹேர் டை, ஹேர் கலரிங் செய்யும்போது பக்க விளைவுகள் உண்டாகும் நிலையில், ரசாயனம் அற்ற, இயற்கை முறை கலரிங்கை நீங்களே வீட்டில் செய்து கொள்ளலாம்.
பிளாக் டீ எனப்படும் டீ டிகாக்ஷனை சுத்தமான தேயிலையை வாங்கி தயாரித்துக் கொள்ளவும். தண்ணீரில் டீத்தூளை ஊறப் போட்டால்கூட அந்த நிறம் அப்படியே இறங்கிவிடும். அதைத் தலையில் தடவி வைத்திருந்து, 10, 15 நிமிடங்கள் கழித்து அலசலாம். காபி டிகாக்ஷனையும் இதேபோல் தடவிக் கொள்ளலாம்.
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் திரிபலா சூரணத்தை வாங்கி, தண்ணீரில் கலந்து குழைத்து, தலையில் ‘பேக்’ போல போட்டுக் கொள்வது இன்னொரு வழி. ஹென்னா எனப்படும் மருதாணி இலையை அரைத்தும் ‘பேக்’ போடலாம். ஆனால், இது குளிர்ச்சியானது. இவை எல்லாமே முடிக்கு பழுப்பு நிறம் கொடுக்கும்.
கருமை நிறம் வேண்டும் என்பவர்கள், ‘பிளாக் வால்நட்’ எனப்படும் பருப்பை வாங்கி, அரைத்து, விழுதாக்கி தலையில் தடவலாம். முடிக்கு கருமை நிறம் கொடுக்கும். ஆனால், இது விலை அதிகம். செம்பருத்திப்பூ அரைத்த விழுதைத் தடவினால் செம்மை கலந்த பழுப்பு நிறம் வரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : ராகுலின் ஹத்ராஸ் பயணம் முதல் ‘கூலி’ ஷூட்டிங் ஆரம்பம் வரை!
கிச்சன் கீர்த்தனா : மட்டன் தோசை
உலக பாரம்பரியக் குழுவின் நாற்பத்து ஆறாவது அமர்வு
ஸ்மார்ட் சிட்டி இயக்கம் நீட்டிப்பு!