ஆண், பெண் என அனைத்து பாலினத்தவருக்கும் தங்கள் முகத்தை பிரகாசமாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காக விளம்பரங்களில் காண்பிக்கப்படும் ஃபேஸ் க்ரீம்களையும் வாங்கி பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால், ஒவ்வொருவருடைய சருமமும் வேறு விதமான தன்மை கொண்டிருப்பதால் இவை சிலருக்கு சரியான பலனளிக்காது.
மேலும், அடிக்கடி இது போன்ற ஃபேஸ் க்ரீம்களை பயன்படுத்துவது சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட காரணமாக அமையும். இதற்கு மாற்றாக இயற்கையான முறையில் வீட்டிலேயே இந்த இரண்டு பொருட்களைக் கொண்டு ஹோம்மேட் ஃபேஸ் க்ரீம் செய்து பயன்படுத்தலாம்.
15 பாதாம் பருப்புகளை இரண்டு முறை கழுவி விட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 12 மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். How to Make Homemade Face Cream
பருப்புகள் ஊறிய பின்னர், அதன் தோல்களை நீக்க வேண்டும். தோல் நீக்கிய பாதாம் பருப்புடன், காய்ச்சாத பால் இரண்டு ஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
பின்னர், இதை வடிகட்டி எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலக்க வேண்டும். இப்படிச் செய்தால் இயற்கையான ஃபேஸ் க்ரீம் தயாராகி விடும்.
இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக முகத்தை நன்றாக கழுவி விட்டு, இந்த க்ரீமை இரண்டு துளிகள் எடுத்து முகத்தில் தேய்க்க வேண்டும். பின்னர், மறுநாள் காலை முகத்தை சாதாரணமாக கழுவி விடலாம்.
இவ்வாறு செய்து வந்தால் முகம் பார்ப்பதற்கு பிரகாசமாக இருக்கும். இதை ஃப்ரிட்ஜில் வைத்தால் 10 நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும். தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம்.