பியூட்டி டிப்ஸ்: பளபளக்கும் முகத்துக்கு ஹோம்மேட் க்ளென்ஸர் இதோ!

Published On:

| By christopher

“நாம் சருமத்தை மாசு மருவின்றி பளபளப்பாக வைத்துக் கொள்வதற்கு உதவும் சில எளிமையான அழகு பராமரிப்புப் பொருட்களை, நம் வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தலாம்’’ என்கிறார்கள் காஸ்மெட்டாலஜிஸ்ட்ஸ். அதற்கான வழிகாட்டல் இதோ…

“உங்கள் முகத்தில் அழுக்குகள் நீங்கினாலே பளிச் என்று ஆகிவிடும். அதற்கு, முதலில் உங்கள் முகத்தை க்ளென்ஸ் செய்ய வேண்டும். வீட்டிலேயே எளிமையான முறையில் க்ளென்ஸர் தயாரித்துக்கொள்ளலாம். இதற்கு கற்றாழை ஜெல், பாதாம் எண்ணெய், வைட்டமின் – ஈ கேப்ஸ்யூல் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவை  தேவைப்படும்.

ஒரு டீஸ்பூன் அளவுக்கு கற்றாழை ஜெல்லை ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன், தலா ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சேருங்கள். இதில் ஒரு கேப்ஸ்யூல் வைட்டமின்-ஈ எண்ணெயை சேர்த்து இக்கலவையை நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர், இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் (Air Tight Container) போட்டு, ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். இதை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு முறை முகம் கழுவும் போதும் இதைப் பயன்படுத்தலாம். நேரம் இல்லாதவர்கள், வாரம் ஒருமுறை இதனைப் பயன்படுத்தி முகத்தை க்ளென்ஸ் செய்து கொள்ளலாம். சிறிது க்ளென்ஸரை எடுத்து முகத்தில் அப்ளை பண்ணி, ஒரு ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் கொடுங்கள். பின்னர், தண்ணீரை வைத்துத் துடைத்திடுங்கள். இவ்வாறு செய்யும்போது அழுக்குகள் அத்தனையும் நீங்கி, முகச் சருமம் மிகவும் சுத்தமாகும். உங்கள் முகம் பளபளக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆடியவே தள்ளுபடி பண்ணியாச்சி : அப்டேட் குமாரு

திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரா நீதிபதி சந்துரு? : அண்ணாமலை கேள்வி!

டிஜிட்டல் திண்ணை: 10 அமைச்சர்களை வீட்டுக்கு அழைத்த ஸ்டாலின் -கேபினட் மாற்றமா?

ஹாக்கியில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுமா இந்தியா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share