இன்றைய சூழ்நிலையில் முடி உதிர்தல் என்பது பலரின் பிரதான பிரச்சினையாக உள்ளது. இந்த நிலையில் கூந்தலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்கி, முடி உதிரும் பிரச்சினையை சரிசெய்ய உதவும் எண்ணெயை வீட்டிலேயே எளிமையான முறையில் தயாரித்துப் பயன்படுத்தலாம் என்கிறார்கள் பியூட்டி தெரபிஸ்ட்ஸ். இதோ அதற்கான வழிகாட்டல்…
முடி உதிர்வைக் கட்டுப்படுத்த உதவும் இந்த எண்ணெயைத் தயாரிக்க ரோஸ்மெரி (Rosemary), கறிவேப்பிலை மற்றும் வெற்றிலை ஆகிய மூன்று முக்கிய மூலிகைகள் தேவை.
ரோஸ்மெரி கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும்.
ரோஸ்மெரி ஃபிரெஷ் ஆகக் கிடைக்கவில்லையென்றால் ரோஸ்மெரி பவுடர் அல்லது ரோஸ்மெரி எஷன்ஷியல் எண்ணெய் (Essential oil) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கியும் சேர்க்கலாம்.
கறிவேப்பிலையில் இருக்கும் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துகள் கூந்தலைச் செழிப்புடன் வளரவைக்கும்.
கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் வெற்றிலைக்கும் உண்டு. குறிப்பாக, வெற்றிலை தலையில் உள்ள எலும்புகளுக்கு ஒரு விறுவிறுப்புத்தன்மையைக் கொடுத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் 200 மி.லி நல்லெண்ணெய் (அல்லது விரும்பும் எண்ணெய்) எடுத்துக்கொள்ளுங்கள்.
அதை அடுப்பில் வைத்துச் சூடாக்குங்கள். எண்ணெய் சற்று சூடானதும் தலா ஒரு கைப்பிடி அளவு ரோஸ்மெரி இலைகள் மற்றும் கறிவேப்பிலை இலைகளை அதில் சேருங்கள். ஒரு கரண்டியை வைத்துக் கலவையை நன்கு கிளறிவிடுங்கள்.
கொதிக்கத் தொடங்கியதும் அதில் ஒரு வெற்றிலையைச் சேர்த்துக் கலவையை மீண்டும் கலந்து விடுங்கள். அடுப்பை சிம்மில் வைத்துக் கலவையை அவ்வப்போது கிளறிவிட்டு நன்கு கொதிக்கவிடுங்கள்.
இதில் சேர்த்திருக்கும் ரோஸ்மெரி, கறிவேப்பிலை மற்றும் வெற்றிலையின் சாறு எண்ணெயில் நன்கு இறங்கி, எண்ணெய் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிடுங்கள். இந்த எண்ணெய்க் கலவையை நன்கு குளிர விடுங்கள். பின்னர், ஒரு கண்ணாடி பாட்டிலுக்கு மாற்றுங்கள்.
எண்ணெயில் இருக்கும் மூலிகை இலைகளை வடிகட்டத் தேவையில்லை. எண்ணெயோடு இதனையும் சேர்த்து அப்படியே பாட்டிலுக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
இந்த எண்ணெயைத் தயாரித்த உடனே பயன்படுத்தாமல், இரண்டு, மூன்று நாட்கள் வெயிலில் வைத்து, வைத்து எடுத்துப் பிறகு பயன்படுத்துங்கள்.
இதனை மொத்தமாகச் செய்துவைக்காமல் வாராவாரம் ஃபிரெஷ்ஷாகத் தயாரித்துத் தலை முடியில் தடவி வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : கமலா ஹாரிஸ் உரை முதல் கமல்ஹாசன் பிறந்தநாள் வரை!
கிச்சன் கீர்த்தனா : ராஜ்மா மசாலா
விஷச்சாராயம் குடித்து 53 பேர் மரணம்… 23 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது!
த்ரிஷா இல்லனா நயன்தாரா: அப்டேட் குமாரு
அரசு ஊழியர்கள் மீது ED வழக்கு தொடர முன் அனுமதி தேவை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!