பியூட்டி டிப்ஸ்: தலைக்கு மருதாணி… எப்படி உபயோகிப்பது?

Published On:

| By christopher

தலைக்குப் போட மருதாணிக் கலவையை வீட்டிலேயே எப்படி எளிமையாகத் தயாரிப்பது எப்படி என்றும் தலைக்கு உபயோகித்த பிறகு கூந்தலை எப்படி அலச வேண்டும் என்றும் விளக்குகிறார்கள் அழகுக்கலை ஆலோசகர்கள்.

“வீட்டிலேயே பறித்த ஃப்ரெஷ் மருதாணி இலைகளைப் பயன்படுத்துவது சிறப்பு. ஒருவருக்கு இரண்டு கைப்பிடி அளவு இலைகள் போதுமானதாக இருக்கும்.

மருதாணி இலைகளை மிக்ஸியிலோ, அம்மியிலோ அரைக்கலாம். பாதி அரைபட்ட நிலையில் அத்துடன் ஸ்ட்ராங்கான டீ டிகாக்‌ஷன் சிறிது சேர்த்து அரைக்கவும். தண்ணீருக்கு பதில் இதைச் சேர்த்தாலே போதும்.

அதில் ஐந்தாறு துளிகள் எலுமிச்சைப் பழச்சாறும், இரண்டு துளிகள் யூகலிப்டஸ் ஆயிலும் விட்டுக் கலந்து கொள்ளவும். நைசாக அரைக்க வேண்டியது முக்கியம்.

மருதாணி இலை நிறைய கிடைத்தால் அதை மொத்தமாக அரைத்து, ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.

மருதாணிப் பொடியை இரும்புக்கடாயில் கலந்து வைத்தால்தான் நல்ல நிறம் பிடிக்கும் என்பது தவறான கருத்து. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் கலந்து வைத்தாலே போதுமானது.

இதை தடவி, சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு அப்படியே வெறும் தண்ணீரில் தலையை அலசினாலே போதும். அன்றைய தினம் ஷாம்பூ வாஷ் தேவையில்லை. அப்படிச் செய்வது பிடிக்காதவர்கள், மருதாணிக் கலவையிலேயே சில துளிகள் ஷாம்பூவையும் சேர்த்துக் கலந்து தலையில் தடவிக்கொண்டு, குளிக்கலாம்.

மற்றபடி ஹென்னா உபயோகித்து இரண்டு நாள்கள் கழித்து ஷாம்பூ உபயோகித்துத் தலைக்குக் குளித்தால் போதுமானது. ஹென்னா உபயோகிக்கும்போது கூந்தல் வறண்டிருக்கக்கூடாது என்பதால் முதல்நாளே தலைக்கு லேசாக எண்ணெய் வைத்துக் கொள்வது நல்லது. அந்த எண்ணெய்ப் பசை தலைமுடியை கண்டிஷன் செய்யும்.

விருப்பமுள்ளவர்கள், மருதாணிக் கலவையுடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்தும் தலைக்குத் தடவலாம். அது இன்னும் நல்ல நிறத்தைக் கொடுக்கும்” என்று விளக்குகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : பீட்ரூட் சட்னி

இன்னும் நீ என்னை பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்க இல்ல… அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்… சலசலக்கும் இரட்டை இலை: என்ன நடக்கிறது அதிமுகவில்?

கஞ்சா வழக்கு : சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்ற காவல்!

கல்லூரி ஆசிரியர், வெற்றி மாறனின் ஆதர்சம்… நடிகர் கிஷோரின் அறியாத பக்கங்கள்!

பொது இடத்தில் சிகரெட்: சிக்கிய வெளியுறவுத்துறை… ஃபைன் போட்ட சுகாதாரத்துறை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share