அழகாகக் காட்சியளிப்பார்கள். ஆனால், அடிக்கடி உடலில் அரிப்பு ஏற்பட்டு அவஸ்தைப்படுவார்கள். எதற்காக ஏற்படுகிறது என்று தெரியாமல் கலங்குவார்கள். அப்படிப்பட்டவர்கள் அருகன் தைலத்தை தடவி வர, விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். அதை நாமே தயாரிக்கும் வழிமுறையையும் சொல்கிறார்கள்.
அருகம்புல் சாறு அரை லிட்டர், தேங்காய் எண்ணெய் கால் லிட்டர், அதிமதுரப் பொடி அல்லது மிளகு 15 கிராம் அதனோடு சேர்த்து மெல்லிய தீயில் காய்ச்சி கரகரப்பு பதத்தில் இறக்கிக்கொள்ளலாம். எளிமையாக வீட்டுத் தேவைக்கு அருகன் தைலத்தை இப்படித் தயாரித்துக்கொள்ளலாம்.
சித்த மருத்துவத்தில் பயன்படும் வெளிப்பிரயோக மருந்துகளுள் அருகன் தைலம் முக்கியமானது. பல்வேறு வகையான தோல் நோய்களுக்கு அருகன் தைலம் சிறப்பான மருந்து. பூஞ்சைத் தொற்றால் ஏற்படக்கூடிய படர்தாமரை… நீண்ட நாள்களாகப் பாடாய்ப்படுத்தும் கரப்பான்… நிறம் மங்கும் தேமல்… போன்ற பிரச்னைகளுக்கு அருகன் தைலம் சிறப்பான மருந்து.
கொசுக்கடியால் ஏற்படும் தடிப்புக்கு அருகன் தைலத்தைத் தடவி வர, அரிப்பும் எரிச்சலும் அடுத்த நொடியே குறைவதை உங்களால் உணர முடியும். கொசு கடித்து கால் பகுதியில் ஏற்படும் சிறு காயங்களின் மெல்லிய படிமங்கள் தோலில் தெரியாமல் இருக்க அருகன் தைலத்தைத் தொடர்ந்து பூசலாம்.
வறண்ட சருமம் இருப்பவர்கள் மாய்ஸ்ச்சரைஸர் போல அருகன் தைலத்தை கை, கால் பகுதியில் தேய்த்துக் கொள்ளலாம். குளிர்காலங்களில் தோலில் ஏற்படும் படலங்களைத் தடுக்கவும் அருகன் தைலத்தை உபயோகிக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : ராஜ்மா புலாவ்
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி – விஜய்… 2026 மாஸ்டர் பிளான் இதுதான்!
தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்கள்… கடும் போக்குவரத்து நெரிசல்!