என்னதான் அழகு சாதனங்கள் பயன்படுத்தினாலும் சில நேரம் முகம் சோர்வடைந்து அந்த சோர்வு நிரந்தரமாகத் தங்கிவிட்டதைப் போன்ற ஒரு தோற்றம் தரும். அந்த நேரத்தில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே உங்களை பிரகாசமாக்கிக் கொள்ளலாம்.
முட்டைகோஸை தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். பின்னர் அதை வடிகட்டி அந்தத் தண்ணீரில் உங்கள் முகத்தை கழுவுங்கள். பிறகு உங்கள் முகத்தின் பளபளப்பை நீங்களே உணர்வீர்கள்
ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள். மூன்று தேக்கரண்டி தயிர் எடுத்துக்கொள்ளுங்கள். அதை நன்றாக கலந்து உங்கள் முகத்தில் தடவுங்கள். அது உலர ஆரம்பித்ததும் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவுங்கள். பிறகு உங்கள் முகம் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர முடியும். தயிருடன் வெள்ளரிக்காய் சாற்றைக் கலந்து முகத்தில் அப்ளை செய்யும்போதும் அத்தகைய பலனைப் பெறலாம்.
இளநீருடன் இரண்டு தேக்கரண்டி அன்னாசிப்பழச் சாறைக் கலந்து முகத்தில் தடவுங்கள். அது காய்ந்ததும் ஐஸ் கட்டிகளைக் கொண்டோ அல்லது குளிர்ந்த நீரிலோ முகத்தைக் கழுவுங்கள். பிறகு உங்கள் முகம் நல்ல பிரகாசமுடன் இருப்பதை உணர்வீர்கள்.
ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை ரோஸ் வாட்டருடன் கலந்து சருமத்தில் தடவி பத்து நிமிடங்கள் உலர விடவும். பின்னர், அதை சாதாரண தண்ணீரில் கழுவி விடுங்கள். பிறகு கண்ணாடியைப் பாருங்கள்… உங்கள் முகத்தில் இளமையான பிரகாசம் வெளிப்படுவதை உணர முடியும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டூருக்கு கிளம்பியாச்சு… அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி… திமுகவின் மலைக்க வைக்கும் டோட்டல் பட்ஜெட்!
“மனுசனால நீ”… ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியான வணங்கான் டிரைலர்!