‘சர்க்கரை நோய் மருத்துவர் எடையைக் குறைக்க வாக்கிங் போகச் சொல்கிறார். வாக்கிங் போனால் மூட்டுவலி அதிகமாகிறது. வாக்கிங் போகாமல் எடையைக் குறைக்க முடியுமா?’ என்கிறவர்கள் நம்மில் பலருண்டு. இதோ அதற்கான தீர்வு…
“நீச்சல் பயிற்சி செய்வதால் கால் மூட்டில் உடல் எடையின் பாரம் விழாது. இதனால் மூட்டுத் தேய்மானம் அதிகரிப்பது, மூட்டுவலி அதிகரிப்பது போன்றவை ஏற்படாது.
அதேபோல சைக்கிளிங் செய்யும்போது ஒட்டுமொத்த எடையும் சைக்கிள் சீட்டில் விழும். இதனால் மூட்டில் எடை விழாது. How to Lose weight without walking
வாக்கிங் செய்ய முடியாது… ஆனால், உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பவர்களுக்கு இந்த இரண்டு பயிற்சிகளும் கைகொடுக்கும். எடையைக் குறைத்துவிட்டால் மூட்டுவலியும் குறைந்துவிடும். அதன்பிறகு வாக்கிங் செல்வது எளிதாக இருக்கும்.
சைக்கிளிங், நீச்சல் போன்ற பயிற்சிகளுடன், ஸ்ட்ரென்த்தனிங் பயிற்சிகளையும் செய்யும்போது உடல் பருமன், மூட்டுவலி இரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
உடற்பயிற்சி செய்பவர்கள் மீன், முட்டை, சிக்கன், பனீர், கீரைகள், நட்ஸ் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்கள் மூடநீக்கியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள். How to Lose weight without walking