பியூட்டி டிப்ஸ்: பளிச்சிடும் பற்களுக்கு இதை ஃபாலோ பண்ணுங்க!

Published On:

| By Minnambalam Desk

“நம் அழகுக்கு அழகு சேர்ப்பது பளிச் பற்களே. மேலும், உடல் ஆரோக்கியத்தில் பல் சுகாதாரம் மிக முக்கியம். பற்கள், ஈறுகளில் பிரச்சினை என்றால் உடலின் பல்வேறு பகுதிகளையும் பாதிப்புக்கு உள்ளாக்கிவிடும். How to Keep your teeth healthy

எல்லாப் பிரச்சினைக்கும் வேர், பல்லாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் பற்களை சுத்தமாக பளிச்சென்று வைத்திருப்பதும், அடிக்கடி பரிசோதிப்பதும், பெரிய பிரச்சினைகளைத் தவிர்க்கும்” என்கிறார்கள் பல் மருத்துவர்கள்.

இந்த நிலையில் பற்களைச் சுகாதாரமாக வைத்துக்கொள்ள பல் துலக்குதல் குறித்து சில அறிவுரைகளையும் வழங்குகிறார்கள். How to Keep your teeth healthy

“ஒவ்வொரு முறையுமே சாப்பிட்டதும் துலக்குதல் மிகவும் நல்லது.

பல் துலக்கும்போது, மேலிருந்து கீழாகத் துலக்க வேண்டும். இட வலமாகத் தேய்க்கக் கூடாது.

ஓவர் பிரஷ்ஷிங் கூடாது. எனாமல் போய்விடும். ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் துலக்கினால் போதுமானது.

பல்லிடுக்கில் ஏதாவது சிக்கிக்கொண்டால், எதையாவது வைத்துக் குத்தாமல், ‘ஃப்லாஸ்’ எனப்படும் நூல் கொண்டு சுத்தம்செய்யவேண்டும்.

மென்பானங்கள், இனிப்புப் பண்டங்கள், பல்லில் ஒட்டிக்கொள்ளும் உணவுப் பொருட்கள், சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்றவற்றைத் தவிர்த்து, நிறைய காய்கறி, பழங்கள் சாப்பிட வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share