நீளமாக நகம் வளர்த்து, டார்க் கலர்களில் நெயில் பாலிஷ், நெயில் ஆர்ட் செய்து கொள்வதுதான் இப்போதைக்கு நக அழகியல் டிரெண்ட்.
இந்த நிலையில் நகங்களை நோய்த்தொற்று இல்லாமல், உடையாமல், பளபளப்பாக எப்படிப் பராமரிப்பது? அழகுக்கலை நிபுணர்கள் சொல்லும் ஆலோசனைகள் இதோ.
நகங்களின் நுனிகளில்தான் நோய்த்தொற்று அதிகம் ஏற்படும். அதனால், நீளமான நகங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை அழுக்கில்லாமல் சுத்தமாக பராமரியுங்கள். கூடவே, 15 நாள்களுக்கு ஒரு தடவை நகங்களை ட்ரிம் பண்ணுங்கள். இதுதான் முறையான நகப் பராமரிப்பு.
விரல்களின் தசையைத் தாண்டி மிக நீளமாக நகம் வளர்க்கும்போது, நீட்டிக் கொண்டிருக்கும் நகங்களில் அவ்வளவாக வலிமை இருக்காது. தவறுதலாக எதன் மீதாவது இடித்துக்கொண்டாலும் இந்த நகம் உடைந்து விடும்.
அப்படி உடையும்போது. தசையுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் நகப்பகுதியும் சேர்ந்தே உடையும். அதனால் முன்னெச்சரிக்கை செயல்படுவது நல்லது.
சிலருக்கு நகத்தின் மேல் ஒரு லேயர் மட்டும் உரிந்து கொண்டே வரும். இவர்கள், 10 மில்லி ஆப்பிள் சிடர் வினிகர், 5 மில்லி பாதாம் எண்ணெய் இரண்டையும் கலந்து சின்னக் கிண்ணங்களில் ஊற்றி, அதற்குள் கை விரல் நகங்களை 10 நிமிடங்கள் ஊற வையுங்கள்.
வாரத்துக்கு இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால், நகங்கள் உரிவது நிற்கும்.
பார்லர்களில் மெனிக்யூர் என்கிற பெயரில் வீரியம் அதிகமான சோப்பு மற்றும் ஷாம்பூவில் ஊற வைத்தால், சில நாட்கள் வரைக்கும் கைகள் பளீரென தெரியத்தான் செய்யும்.
ஆனால், தொடர்ந்து இப்படி சருமத்தின் தோலில் இருக்கிற எண்ணெய்ப்பசையெல்லாம் போய் சுருக்கம் விழ ஆரம்பிக்கும்.
எனவே, வீட்டிலேயே வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் எப்சம் சால்ட், ஒரு டீஸ்பூன் கல் உப்பு, ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணேய், 50 சொட்டுகள் ரோஸ் ஆயில், தேவையென்றால் கால் டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, அதில் கை விரல்களை ஊற வைத்தால், நகம் சுத்தமாவதுடன் பலமும் கிடைக்கும்.
கைகளின் சருமத்துக்கும் எந்தத் தீங்கும் வராது. இதை 15 நாள்களுக்கு ஒருமுறை செய்தால் போதும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இடிக்கும் பணி தொடங்கியது : ரஜினியின் சிவப்பு சூரியனோடு உதயம்; வேட்டையனோடு அஸ்தமனம்!
மாருதி 800 தெரியும்… ஒசாமு சுசூகி தெரியுமா? இந்திய கார் சந்தையை மாற்றியமைத்த தந்தை மறைவு!