ஹெல்த் டிப்ஸ்: கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிப்பது எப்படி?

Published On:

| By Kavi

சிலருக்கு கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பதாகவும் நல்ல கொழுப்பின் அளவு குறைவாக இருப்பதாகவும் அதை சரி செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். நல்ல கொழுப்பை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? டயட்டீஷியன்ஸ் சொல்லும் விளக்கம் இதோ…

“கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிப்பதில்  வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் என எல்லாவற்றுக்கும் பங்கு உண்டு.

ஒவ்வொரு வேளை உணவிலும் நார்ச்சத்து இருக்க வேண்டியது அவசியம். உதாரணத்துக்கு, காலையில் பலரும் இட்லி, தோசை, பொங்கல் சாப்பிடுவார்கள். தொட்டுக் கொள்ள எண்ணெய், மிளகாய்ப் பொடியோ, சட்னி, சாம்பாரோ இருக்கும். கூடியவரை எண்ணெய், மிளகாய் பொடியைத் தவிர்த்துவிடுங்கள்.

சட்னியில் நார்ச்சத்தை அதிகரிக்க காய்கறி சட்னியாக மாற்றலாம். சாம்பாரில் நிறைய காய்கறிகள் சேர்த்துச் செய்யுங்கள்.

இவற்றைப் பின்பற்ற முடியாத பட்சத்தில், உணவுடன் ஒரு பழம் சாப்பிடலாம். மோரில் சப்ஜா விதை, புதினா, கொத்தமல்லி சேர்த்துக் குடிக்கலாம்.

மதிய உணவில், உங்கள் தட்டில் 250 கிராம் அளவு காய்கறிகள் இருக்க வேண்டும். அதாவது தட்டில் பாதி அளவு காய்கறி இருக்க வேண்டும்.

பொரியல், கூட்டு, அவியல், துவையல் என எடுத்துக் கொள்ளலாம். மீதி அரை பாகம் புரதச்சத்தும் கார்போஹைட்ரேட்டும் இருக்கட்டும்.

மாலை நேரத்துக்கு பழங்கள், நட்ஸ், காய்கறி சேர்த்த சுண்டல் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இரவு உணவோடும் பொரியல், கூட்டு, கிரேவி, சாலட் என ஏதேனும் ஒரு வடிவத்தில் காய்கறி இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு 4 முதல் 5 டீஸ்பூனுக்கு மேல் எண்ணெய் உபயோகிக்க வேண்டாம்.

அடிக்கடி வெளியே சாப்பிடுவதால் அந்த உணவுகளை அடிக்கடி சூடுபடுத்துவது, உபயோகித்த எண்ணெயைப் பயன்படுத்திச் சமைப்பது போன்றவை காரணமாக டிரான்ஸ்ஃபேட் எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும். எனவே, அதை அவசியம் தவிர்க்கவும்.

தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவும். போதுமான அளவு தூக்கம் முக்கியம்.

இவற்றை எல்லாம் பின்பற்றினாலே கெட்ட கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கும்” என்று நம்பிக்கை அளிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: காய்கறி பக்கோடா! 

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் : இந்தியா சாதனை!

ஆளுநர் பதவி முக்கியம் போல : அப்டேட் குமாரு

2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள் : மீனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share