மேக்கப் சாதனங்கள் வாங்கும்போது அவற்றின் தோற்றத்தை நம்பி வாங்காமல் தரத்தைப் பார்த்து வாங்குவது அவசியம். மேக்கப் சாதனங்களில் வெளித்தோற்ற அளவில் ஒரிஜினல் போன்று போலிகளையும் உருவாக்கிவிட முடியும். அதனால்தான் விலை குறைவான மேக்கப் கருவிகள் மார்க்கெட்டுகளிலும், ஆன்லைனிலும் சுலபமாகக் கிடைக்கின்றன.
ஒரு கருவியைத் தேர்வு செய்யும் முன் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக், உறுதித்தன்மை, எடை இவற்றையெல்லாம் செக் செய்ய வேண்டும்.
சில பொருட்களை தரமற்ற பிளாஸ்டிக்கில் செய்திருப்பார்கள். பார்க்கும்போதே அதன் தன்மை தெரிந்துவிடும். இதுபோன்ற பொருட்களை விலை குறைவாகக் கிடைப்பதாலேயே வாங்காதீர்கள்.
மேக்கப் கருவிகளின் உட்புறத்தை செராமிக் அல்லது விரைவில் துருப்பிடிக்காத இரும்பு கொண்டு வடிவமைப்பார்கள். ஆனால், போலி பொருட்களில் மட்டமான பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களே உபயோகிக்கப்பட்டிருக்கும். இது அந்தச் சாதனத்தை விரைவில் சூடுபடுத்தி நாளடைவில் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஒரு கருவி எவ்வளவு நேரத்தில் சூடாகிறது, அதன் வோல்டேஜ் என்ன, அதன் மூலப்பொருள் என்ன… என்பதையெல்லாம் செக் செய்து பார்த்த பிறகே வாங்க வேண்டும். மேலும், அதில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதையும் பார்த்து வாங்குங்கள்.
தரமற்ற கருவியில் அதைப் பயன்படுத்துவதற்கான அடிப்படையான சில ஆப்ஷன்களை மட்டுமே கொடுத்திருப்பார்கள். ஆனால், நமக்குத் தேவைப்படும் ஆப்ஷன்கள் இருக்காது. எனவே ஆப்ஷன்களையும் பார்த்துவிட்டு தேர்வு செய்யுங்கள்.
ஒரு பொருளை வாங்கும்போது மற்ற பிராண்டுகளில் அதே பொருள் என்ன விலையில் கிடைக்கிறது என்பதையும் செக் செய்யுங்கள். ஆயிரக்கணக்கில் விலை வித்தியாசம் இருந்தால் அவை நிச்சயம் போலியாகவோ அல்லது தரமற்றதாகவோதான் இருக்கும். ஆன்லைனில் வாங்கும்போது மற்றவர்களின் கமென்ட்டுகளையும் (கஸ்டமர் ஃபீட்பேக்) படித்துப் பாருங்கள்.
போலியான தயாரிப்புகளைக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு சிக்கல் இருக்கும்பட்சத்தில், அனுபவமிக்க அழகுக்கலை நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவதுதான் சிறந்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : சிக்கன் ரைஸ் பால்ஸ்
டிஜிட்டல் திண்ணை: கொடைக்கானலில் ஸ்டாலின்… ஹாட் அமைச்சர்கள்!
ஊட்டிக்கு போகக் கூட பயமாதான் இருக்கு : அப்டேட் குமாரு
பிஎஸ்என்எல்-ன் முத்தான மூன்று திட்டங்கள்!