பியூட்டி டிப்ஸ்: மெலிந்த புருவங்கள்… அடர்த்தியாக வளர இதோ வழி!

Published On:

| By christopher

புருவங்களின் உள்ள முடிகள் உதிர்ந்து மெலிதாகும்போது தங்களுடைய அழகே போய்விட்டது என்று புருவங்களை அடர்த்தியாகக் காட்ட மேக்கப் செய்வார்கள் சிலர். அப்படியில்லாமல் மெலிந்த புருவங்கள் அடர்த்தியாக வளர வீட்டிலேயே எளிய வழி இருக்கு என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள். எப்படி?

“விளக்கெண்ணெய், கேரட் சீட் ஆயில், வெஜிடபிள் கிளிசரின் மூன்றையும் வாங்கிக் கொள்ளவும். 50 மில்லி விளக்கெண்ணெயில் (Castor oil) சிறிதளவு கேரட் சீட் ஆயில் (Carrot seed oil), 5 மில்லி கிளிசரின் (Glycerin) சேர்த்து கலந்து ஒருநாள் முழுவதும் அப்படியே வைத்திருக்கவும்.

புருவங்களை வெந்நீரில் நனைத்த துணியால் துடைத்துவிடவும். பிறகு, புருவங்களுக்கான சின்ன சீப்பு வைத்து எதிர்த்திசையில் வாரிவிடவும். பிறகு, தயார் செய்துவைத்துள்ள எண்ணெய்க் கலவையில் விரலைத் தொட்டு, புருவங்கள் வளரும் திசையிலேயே மீண்டும் மீண்டும் தடவவும். அரை மணி நேரம் அப்படியே விடலாம்.

ஐப்ரோ பென்சிலின் முனைப்பகுதியை நீங்கள் தயாரித்து வைத்துள்ள எண்ணெய்க் கலவையில் மூழ்கும்படி போட்டு வையுங்கள். இரவு தூங்கும் முன் மீண்டும் புருவங்களை எதிர்த்திசையில் வாரிவிட்டு, எண்ணெயில் ஊறிய ஐப்ரோ பென்சிலால் புருவங்களின் மேல் ஏழெட்டு முறை வரைந்துவிட்டு அப்படியே தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை கழுவிவிடுங்கள்.

தொடர்ந்து ஒரு மாதம் இப்படிச் செய்துவந்தால் உங்கள் புருவங்கள் போஷாக்கு அடைந்து, உதிர்ந்த முடிகள் மீண்டும் உயிர்பெற்று, கருமையாக வளரத் தொடங்கும்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : பிரதமர் மோடி திறக்கும் சுரங்கப்பாதை முதல் மகா கும்பமேளா தொடக்கம் வரை!

கிச்சன் கீர்த்தனா : ரகடா பாட்டீஸ்  

மனசுல பெரிய அஜித் குமாருன்னு நினைப்பு… அப்டேட் குமாரு

அயலகத் தமிழர் தினம்… இத்தனை கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தமா?

அருள்தாஸ் பற்றி அந்த விஷயம் தெரியுமா? – இன்ட்ரஸ்டிங் தகவல்கள்!

டிஜிட்டல் திண்ணை: கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி… பிரிந்து நிற்கும் எம்எல்ஏக்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share