இன்று பலரும் நீண்ட அடர்த்தியான புருவங்கள், இமை போன்றவற்றை வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். இதற்கு இயற்கையான வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி நீண்ட அடர்த்தியான புருவங்கள் மற்றும் கண் இமைகள் பெறலாம் என்கிறார்கள் சருமநல மருத்துவர்கள்.
“கற்றாழை ஜெல்லை எடுத்து அதனை இரவில் கண் இமைகளில் தடவ வேண்டும். பின்னர் காலையில் முகத்தை கழுவ வேண்டும். இதன்மூலம் இமைகள் நீரேற்றமாக வைத்து ஊட்டச்சத்துகளை அதிகரிக்க உதவுகிறது.
தேங்காய் எண்ணெயை புருவங்கள் மற்றும் இமைகளில் லேசாக தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவரும் போது இமை முடி தடிமனாகவும், வலுவாகவும் வளர்வதை பார்க்கலாம்.
வைட்டமின் ஈ எண்ணெயைப் பயன்படுத்துவது இமைகளை வலுப்படுத்துவதுடன், அவை உடைவதைத் தடுக்க உதவுகிறது. இதற்கு சுத்தமான தூரிகை அல்லது விரலை பயன்படுத்தி சில துளிகள் வைட்டமின் ஈ எண்ணெயை கண்களில் தடவ வேண்டும்.
இது கண் இமை வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், கண் பார்வைக்கும் உதவுகிறது.
முடி ஆரோக்கியத்திற்கு ஆமணக்கு எண்ணெய் மிகவும் சிறந்த தேர்வாக அமைகிறது. எனவே, புருவத்தில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க விரும்புபவர்களுக்கு ஆமணக்கு எண்ணெய் ஒரு சிறந்த விஷயமாகும்.
ஆமணக்கு எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இது வேர்களிலிருந்து கண் இமைகளுக்கு ஊட்டமளிக்கவும், வலுப்படுத்தவும் உதவுகிறது.
மேலும் ஆமணக்கு எண்ணெய் கண் இமை முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஒரு சிறிய துண்டு பருத்தித் துணியை எண்ணெயில் தோய்த்து, இரவில் படுக்கைக்கு போகும் முன்னதாக கண் இமையில் தடவ வேண்டும்.
பிறகு இதை காலையில் கழுவி விடலாம். இதன்மூலம் தடிமனான, ஆரோக்கியமான கண் இமைகளைப் பெறலாம்” என்கிறார்கள் சருமநல மருத்துவர்கள்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கொடூரமானது : ஸ்டாலின்
கீர்த்தி சுரேஷ் திருமணம்: நேரில் வாழ்த்திய விஜய்
72 ஆண்டுகளில் குறைவான நாட்கள் கூடிய பேரவை : பட்டியலிட்டு ராமதாஸ் காட்டம்!
கம்பீரமான அழகியல்… வைக்கத்தில் அமைச்சர் வேலுவை பாராட்டிய ஸ்டாலின்
1.60 லட்சம் கோடியுடன் ரஷ்யாவுக்கு தப்பிய சிரிய அதிபர்… மாஸ்கோவில் உல்லாச வாழ்க்கை!