சருமத்தில் வரும் பால் மருக்களுக்கு என்ன தீர்வு? அது ஏன் வருகிறது? அது அடுத்தவருக்கும் தொற்றுமா? சிகிச்சை என்ன?
“பால் மரு என்பது ஒருவகையான வைரஸ் தொற்றால் ஏற்படுவது. இதை ‘மொலஸ்கம் கன்டேஜியோசம்’ (Molluscum contagiosum)” என்கிறார்கள் சரும மருத்துவர்கள் .
இது குழந்தைகளைப் பரவலாக பாதிக்கும். நீச்சல் குளம், ஹாஸ்டல், ஜிம் போன்ற பொதுவான இடங்களைப் பயன்படுத்தும் பெரியவர்களுக்கும், குழந்தைகள் வைத்திருப்போருக்கும் இது வரலாம். வைரஸ் தொற்று என்பதால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவக் கூடியது. குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்களை இது அதிகம் பாதிக்கும். சரும மருத்துவரை அணுகினால் பால் மருக்களை நீக்குவதற்கான சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.
எலக்ட்ரோஃபல்குரேஷன் (Electrofulguration) உள்ளிட்ட பல வழிகளில் இந்த மருக்களை மருத்துவர் அகற்றுவார். தேவைப்பட்டால் மருத்துவர் ஸிங்க் சப்ளிமென்ட்டுகளை பரிந்துரைப்பார். அதில் ஆன்டிவைரல் தன்மை இருப்பதால் தொற்று பாதிக்காமல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
“பால் மருவின் அளவைப் பொறுத்து சிகிச்சை அமையும். சிறிய மரு என்றால் க்ரீம் மட்டுமே போதுமானதாக இருக்கும். பெரிய, ஆழமான மரு என்றால் அதை அகற்ற வேண்டியிருக்கும்” என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: முடக்கத்தான் கீரை – காய்கறி பணியாரம்
மனுசனா… தெய்வமா… குழப்பமா இருக்கே?: அப்டேட் குமாரு
நானியின் பாச போராட்டம்… “ஹாய் நான்னா” ட்ரெய்லர்!
மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்: த்ரிஷா ரிப்ளை!