How to get rid of summer itching

பியூட்டி டிப்ஸ்: கோடையில் ஏற்படும் அரிப்பு… விரட்டுவது எப்படி?

டிரெண்டிங்

கோடைக்காலத்தில் நாம் சாப்பிடும் உணவு, உபயோகிக்கும் பொருட்கள், சுற்றுச்சூழல் என திடீர் அரிப்புக்கு பல காரணங்கள் உண்டு.  குறிப்பாக டூ வீலர் ஓட்டும் சிலருக்கு, ஹேண்டில்பாரில் கைகள் பட்டுக்கொண்டே இருப்பதால், திடீரென கைகளில் அரிப்பு, சிவந்து போவது போன்றவை வரலாம்.

கவரிங் நகைகள் அணிவோருக்கும் வாட்ச் உபயோகிப்பவருக்கும்கூட இந்த வகை அரிப்பு வரலாம். நிக்கல், தங்கம், குரோமியம் உள்ளிட்ட உலோகங்களை எந்த வடிவத்தில் பயன்படுத்தினாலும் அது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி, அரிப்பை வரவழைக்கலாம்.

சோப், மருந்துகள், அழகு சாதனங்கள், மருந்துகள், தூசு போன்றவற்றாலும் சிலருக்கு திடீர் அரிப்பு ஏற்படலாம். அது உடல் முழுவதுமோ அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

இந்த நிலையில் அரிப்பு அதிகரிக்கும்போது கேலமைன் லோஷன் தடவலாம். அது அரிப்பை மட்டுப்படுத்தி, சருமத்தில் ஏற்பட்ட சிவந்த தடிப்புகளையும் சரி செய்யும். How to get rid of summer itching

கற்றாழை ஜெல்லுடன் இளநீர் கலந்து அரிப்புள்ள பகுதிகளில் தடவலாம்.  செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயோடு, கற்றாழை ஜெல் கலந்து தடவுவதும் சிறந்தது.

சுத்தமான சந்தனம் தடவலாம்.

கடினமான சோப், டிடெர்ஜென்ட், அதிக வாசனையுள்ள அழகு சாதனங்கள், சென்ட் போன்றவற்றை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஆன்டிஹிஸ்டமைன் (Antihistamine) க்ரீம் அல்லது ஜெல் பயன்படுத்தலாம்.

அரிப்பு ஏற்படும்போது சொரியாமல் கட்டுப்படுத்தி, மேற்குறிப்பிட்டவற்றில் ஒன்றைத் தடவுவது  ஆரம்ப நிலையிலேயே நிவாரணம் தரும்.

அரிப்பு உள்ளவர்களின் டவல், படுக்கைவிரிப்பு, உடைகள் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.

உள்ளாடைகளை நன்கு துவைத்து வெயிலில் காயவைத்துப் பயன்படுத்த வேண்டும். வெந்நீரில் அலசுவதும் சிறந்தது.

அரிப்பு மட்டுமன்றி, அந்த இடத்திலிருந்து நீர், ரத்தம் கசிந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.

அலர்ஜி, அரிப்புக்கான மாத்திரைகளை நீங்களாக வாங்கிச் சாப்பிட வேண்டாம். மருத்துவப் பரிசோதனையும் முறையான சிகிச்சையும் மட்டுமே நிரந்தரத் தீர்வு தரும். How to get rid of summer itching

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் குஷ்புவிற்கு பதிலளிப்பார்கள்” : கீதாஜீவன்

அத ரெண்டு மணிக்கு தான் கேப்பியா? : அப்டேட் குமாரு

பட்ஜெட் விலை: இந்தியாவில் அறிமுகமான ‘iQOO Z9 5G’… சிறப்பம்சங்கள் என்ன?

எலெக்‌ஷன் ஃபிளாஷ் : பாஜக அணியில் பாமக!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0