பலருக்கும் உண்டாகும் சருமப் பிரச்சினைகளில், கை முட்டிகளில் உண்டாகும் கருமை முக்கியமானது. ஆனால், இந்தக் கருமையை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிதாக மூன்று ஸ்டெப்களில் போக்கி விடலாம் என்கிறார்கள் பியூட்டி தெரபிஸ்ட்ஸ்
முதல் ஸ்டெப் செய்வதற்கு எலுமிச்சையும் வெள்ளைச் சர்க்கரையும் தேவைப்படும். இந்த இரண்டும் ஒரு திறன்மிகுந்த ஸ்கிரப்பராக செயல்படும் ஆற்றல் கொண்டது. எலுமிச்சையை முதலில் பாதியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பின்னர், பாதி மூடி எலுமிச்சையை சர்க்கரையில் தோய்த்து எடுத்து, அதை கருமையாக உள்ள கை முட்டிப் பகுதியில் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு எலுமிச்சை சாற்றை லேசாகப் பிழிந்தபடி மென்மையாகத் தேய்த்துக்கொண்டே வாருங்கள். அப்பகுதியில் உள்ள கருமை கொஞ்சம் கொஞ்சமாக மாறும். பின்னர், ஒரு டிரை டிஷ்யூ பேப்பரைக் கொண்டு நன்றாகத் துடைத்தெடுங்கள். சென்சிட்டிவான சருமம் கொண்டவர்கள் இந்த எலுமிச்சை – சர்க்கரை சிகிச்சையைத் தவிர்த்துவிடுவது நல்லது. கீழே கொடுக்கப்பட்டுள்ள மீதமுள்ள இரண்டு ஸ்டெப்களையும் பின்பற்றலாம்.
இரண்டாவது ஸ்டெப்புக்கு, சிறிதளவு ஓட்ஸை எடுத்து, கொஞ்சம் தயிரில் ஊறவையுங்கள். பின்னர், இதை கை முட்டிகளில் ஒரு ஐந்து நிமிடங்களுக்கு நன்கு ஸ்கிரப் செய்யுங்கள். ஒரு துணியை வைத்து இதனை நன்கு துடைத்திடுங்கள்.
மூன்றாவது ஸ்டெப்பாக, ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளியின் கூழ் மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் முல்தானி மட்டி பவுடர் ஆகிய இரண்டையும் சேர்த்து, நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை கை முட்டிகளில் இரண்டு, மூன்று கோட்டிங்குகளாக அப்ளை பண்ணுங்கள். உடம்பில் எங்கெல்லாம் கருமை இருக்கிறதோ அங்கெல்லாமும் இதனைப் பயன்படுத்தலாம். ஒரு பத்து நிமிடங்களுக்கு இதை அப்படியே விடுங்கள். பின்னர், ஒரு துணியால் துடைத்து எடுத்திடுங்கள்.
இப்போது பாருங்கள்… உங்கள் கை முட்டிகள் கருமை நீங்கி, பளிச்சென்று மின்னும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : அமெரிக்கா செல்லும் முதல்வர் முதல் பாரிஸ் பாராலிம்பிக் துவக்கம் வரை!
கிச்சன் கீர்த்தனா : டிரை ஃப்ரூட் குக்கீஸ்
“துரைமுருகன் பற்றி ஸ்டாலின் சொல்லிதான் ரஜினி பேசினார்”… கே.பி.முனுசாமி பகீர்!
தமிழக அளவில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் நாளை மறியல் போராட்டம்!