குறுகிய நெற்றியை உடையவர்கள் சிறிய பொட்டும், விசாலமான நெற்றியுடைய பெண்கள் பெரிய பொட்டும் வைத்துக் கொள்வது எடுப்பாய் இருக்கும்.
வட்ட முகமுள்ளவர்கள் நீள வடிவிலும், நீண்ட முகமுடையவர்கள் வட்ட வடிவிலும் பொட்டு வைத்தால் அழகாக இருக்கும்.
சிவந்த நிறமுடைய பெண்கள் கருநிறப் பொட்டும், மற்ற பெண்கள் இளஞ்சிவப்பு, ஆரஞ்சு நிறப் பொட்டும் இட்டால் அழகாக இருக்கும்.
சாந்து பொட்டு வைக்கும்போது பொட்டு வைத்த பிறகு முகப்பவுடர் பூசிக்கொண்டால் முகம் பளிச்சென தோற்றமளிக்கும்.
குங்குமப் பொட்டு இடும்போது பவுடரை முதலில் பூசி விட்டு பிறகு பொட்டு வைக்க வேண்டும்.
நெற்றியில் பொட்டிட்ட பிறகு அதன் ஈரம் காய்வதற்குள் அதற்கென உள்ள ஜிகினாப் பொடியை மேலே தூவிவிட்டுக் கொண்டால் அழகாக இருக்கும்.
ஸ்டிக்கர் பொட்டை ஒரு நாளைக்கு மேல் உபயோகிக்க கூடாது. ஒரே பொட்டை பல நாட்கள் வைத்தால் சரும நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நெற்றியில் ஒரே இடத்தில் தினமும் பொட்டு வைக்காதீர்கள். மேல், கீழ், வலது, இடது என அவ்வப்போது சிறிது நகர்த்தி வைத்தால் பொட்டு வைப்பதால் ஏற்படும் சரும் அலர்ஜி ஏற்படாது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..
நான் அடிச்சா தாங்கமாட்டே… அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: இரட்டை இலை சின்னத்துக்கு ஆபத்தா? எடப்பாடி முடிவில் மாற்றம்!
ரூ.8.65 லட்சம் கோடி முதலீடு… 30 லட்சம் வேலைவாய்ப்பு: அரசு!
அச்சாரம் போட்ட கலைஞர்… அப்டேட் செய்யும் ஸ்டாலின்… தொடங்கியது கணித் தமிழ் மாநாடு!