தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பரபரப்பான ஷாப்பிங்கில் இருக்கிறீர்களா? என்ன ஆடைகள் வாங்கலாம், என்ன மாதிரியான அவுட் ஃபிட் நமக்குப் பொருத்தமாக இருக்கும், இந்தத் தீபாவளிக்கு நீங்கள் அழகில் ஜொலிக்கத் தேவையான, உங்கள் உடலுக்குப் பொருத்தமான அவுட் லுக்குக்கு டிப்ஸ் தருகிறார்கள் நம்மூர் ஸ்டைலிஸ்ட்ஸ்.
பொதுவாகத் தீபாவளிக்கு நிறைய வகையான புது ஆடைகள் டிரெண்டில் களம் இறங்கும். அவற்றில் நமக்குப் பொருத்தமான ஆடையைத் தேர்வு செய்வதுதான் சவாலே. புடவையில் புது டிரெண்டான டஸர் சில்க்கில் ஆரம்பித்து, இண்டோ வெஸ்டர்னில் ஷராரா வரை எந்த ஆடையைத் தேர்வு செய்தாலும் அதை உங்களுக்கு ஏற்ற மாதிரி பொருத்திக்கொண்டால் நீங்கள்தான் தேவதை.
டிரெடிஷனலான பட்டுப்புடவை, டஸர் சில்க், சில்க் காட்டன், டிசைனர் புடவைகள், நெட்டட் புடவைகள்… என நம் பாரம்பர்யமான ஆடைகளிலும் சின்னச் சின்ன புதுமைகளுடன் வடிவமைக்கப்படும் புடவைகள்தான் இந்த வருடத்தின் ஸ்பெஷல்.
இப்படிப் புடவையில் ஸ்மார்ட்டாக வலம்வர விரும்பும் பெண்கள் உங்களுடைய ப்ளவுஸ்களில் வெரைட்டி காட்டலாம். ஒல்லியான பெண்களுக்கு போட் நெக், எல்போ ஸ்லீவ், ஹை காலர் பொருத்தமான தேர்வாக இருக்கும். உடல் பருமனான பெண்கள் எனில், நெட்டட் ஸ்லீவ், டீப் நெக் போன்றவை சரியான தேர்வு.
பட்டுப் புடவைகளுக்கு ப்ளவுஸ் மேட்ச் செய்கிறீர்கள் எனில், ஸ்லீவ்வில் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்து கொள்ளலாம். டிசைனர் புடவைகள் எனில், பேட்டர்ன் வேலைப்பாடுகள் செய்யலாம். என்னதான் புடவைக்கு ஏற்ற ப்ளவுஸ்ஸை மிக்ஸ் மேட்ச் செய்வதில் நேரத்தை செலவழித்தாலும், அக்ஸசரிஸ் தேர்வு செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் உங்களுடைய மொத்த கெட்டப்பின் அழகும் வீணாகிவிடும்.
டிரெடிஷனலான புடவை எனில், நகா செட் அல்லது கிராண்டான டிரெடிஷனல் நகைகளைத் தேர்வு செய்யலாம். காட்டன் புடவைகள் எனில், ஆக்ஸிடைஸ்டு நகைகள் பொருத்தமாக இருக்கும். டிசைனர் புடவை எனில், சிம்பிலான ஜோக்கர் டைப் அணிகலன்கள் அணிந்தால் பொருத்தமாக இருக்கும்.
அடர்நிற ஸ்கர்ட்டுடன் கூடிய லெஹெங்கா கடந்த சில ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் டிரெண்டில் கலக்குகிறது. கிராண்ட் லுக் விரும்பிகள் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளுடன்கூடிய ஸ்கர்ட் அண்ட் துப்பட்டாவைத் தேர்வு செய்யலாம். சிம்பிள் லுக்கை விரும்புபவர்கள், அதிகப்படியான எம்ப்ராய்டரி, ஸ்டோன் வேலைப்பாடுகள் கொண்டவற்றைத் தவிர்க்கலாம்.
இரண்டு பக்கம் ஸ்லிட் கொண்ட லாங் குர்தாவுடன் கூடிய ஆடைகள் உங்களை மெச்சூட் லுக்கில் காட்டும். அதே நேரம் கிராண்ட் லுக்கிலும் இருக்கும். ஆடையின் நிறத்துக்கு ஏற்ற சிம்மிளான நகைகளைத் தேர்வு செய்து அணியலாம்.
பாரம்பர்யமான நம் சுங்குடி அல்லது பட்டுப்புடவையின் கிளாஸிக் டிசைனில் தயாரிக்கப்படும் லாங் அனார்கலி ஆடைகளும் ஹாட் டிடெண்டாகப் பெண்களிடம் வலம் வருகிறது. ட்ரெடிஷனல் லுக் வேண்டும் என்பவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ். உங்களின் நிறத்துக்குப் பொருந்தும் வகையில் இரண்டு கான்ட்ராஸ்ட் வண்ணங்கள் கொண்ட ஆடைகளைத் தேர்வு செய்து, பாலி டைப் கம்மல்கள், சிம்பிளான வளையல்களை அணிந்து ஃப்ரீ ஹேர் அல்லது ஃபிஷ் டெயில் ஹேர் ஸ்டைல் இட்டுக்கொண்டால் நீங்கள்தான் டிரெண்ட் செட்டர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இனிமே ஒரு வாரத்துக்கு இதுதான் ஸ்நாக்ஸா?– அப்டேட் குமாரு
மகளிர் பாதுகாப்பு, வானிலை தகவல் பகிர்வு: தவெக மாநாட்டுக்கு குழுக்கள் அமைப்பு!
புதுசு புதுசா நடக்குதே… சஹாராவில் 50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி!
வானில் வட்டமடித்த விமானம்: என்ன நடந்தது? எப்படி தரையிறக்கப்பட்டது?
10 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!