சுத்தமான உடம்பே ஆரோக்கியத்தின் அஸ்திவாரம். அதைப் பேண வேண்டிய அவசியம் ஆரம்பிக்கும் பருவம்… பதின் வயது.
வியர்வை துர்நாற்றம், அக்குள், ரோம வளர்ச்சி, மாதவிடாய் சுகாதாரம், விந்து வெளியேறுதல் என்று அனைத்தையும் அவர்கள் எதிர்கொள்ள ஆரம்பிக்கும் இக்கால கட்டத்தில், சுயசுத்தம் குறித்த விஷயங்களைப் பகிர்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.
குறிப்பாக, “பெண் பிள்ளைகள் மிகவும் இறுக்கமாக பேன்டி, பிரேஸியர் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
அப்படி அணிந்தால் வியர்வையால் பூஞ்சைத் தொற்று வரலாம். எனவே, தளர்வான காட்டன் உள்ளாடைகள் மற்றும் ஆடைகளை அணிவது நல்லது.
தொடர்ந்து ஜீன்ஸ் அணிகிற பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும். அதனால் காற்றோட்டம் தடைபட்டு வியர்வை மற்றும் ஈரம் காரணமாக வஜைனா மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பூஞ்சைத்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி ஏற்பட்டால் அரிப்பு, அதனைச் சரிசெய்ய க்ரீம், மருந்துகள் என்று சிரமப்பட வேண்டும்.
ஆண் பிள்ளைகள் தொடர்ந்து இறுக்கமாக பேன்ட் அணிந்தால் விரைப்பை சூடாகும். இதனால் விந்தணுக்களின் உற்பத்தி குறையும்.
மேலும், இவர்கள் குளிக்கும்போது ஆணுறுப்பின் மேல் தோலை நீவி, அப்பகுதியை நார்மல் சோப்பு போட்டு, பின்னர் தண்ணீர்விட்டு சுத்தம் செய்துவர அறிவுறுத்த வேண்டும்.
பெண் பிள்ளைகள் தரமான காட்டன் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவது நல்லது. உதிரப்போக்கு இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறையும் நாப்கினை மாற்ற வேண்டும்.
13 வயதுக்குப் பிறகு சில பிள்ளைகளுக்கு வெயிட் போட ஆரம்பிக்கும். இதன் காரணமாக நடக்கையில் தொடை இரண்டும் உரசி, உரசி தொடை ஓரங்கள் புண்ணாவதோடு அப்பகுதி கருமையடையும்.
தொடை ஓரங்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது… புண்ணுக்கும் கருமைக்கும் எளிய தீர்வு.
பதின் பருவப் பிள்ளைகளுக்கு ரிங் வார்ம் உள்ளிட்ட பூஞ்சை தொற்றுகள் எதுவும் ஏற்பட்டால், அவர்கள் உள்ளாடைகளை வாஷிங் மெஷினில் போடாமல் தனியாகத் துவைக்க வேண்டும். இல்லை யெனில், வீட்டில் அது மற்றவர்களுக்கும் பரவும்” என்று எச்சரிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : ராகி லட்டு
முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து கதறி அழுத ஸ்டாலின்
சென்னை கடற்கரை – வேளச்சேரி: நவம்பர் முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை!
வேல சொல்லியே உசுர வாங்குறாங்க: அப்டேட் குமாரு