பணியில் இருக்கும் சிலர் அலுவலகம் வந்த ஒரு மணி நேரத்திலேயே களைப்பாக உணர்வார்கள். இரவில் 7 மணி நேரம் தூங்கினாலும் பணியிடத்தில் தூங்கி வழிவார்கள். இந்த களைப்பும், தூக்கமும் எதனால் வருகிறது? இதை விரட்டுவதற்கு என்ன செய்யலாம்?
“களைப்பாக உணர ஒவ்வொருவருக்கும் காரணங்கள் வேறுபடலாம். ஒரு நாளைக்கு நமக்குத் தேவையான உணவை சரியானதாகவும் சரியான நேரத்திலும் சாப்பிட வேண்டியது ஆரோக்கியத்துக்கு அடிப்படை.
இரவில் வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு, பகலில் பட்டினி கிடப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு பகலில் எனர்ஜி குறைவாக இருக்கும். எனவே, ஒவ்வொரு வேளை உணவுக்கும் சரியான இடைவெளி முக்கியம்.
அடுத்தது தூக்கம். ஆரோக்கியமான நபருக்கு 6 முதல் 8 மணி நேர தூக்கம் போதுமானது. ஆனால், சிலர் 8 மணி நேரம் தூங்கினாலும் அடுத்த நாள் காலையில் களைப்புடனேயே எழுந்திருப்பார்கள். காரணம், தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்காமல், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரத்தில் தூங்குவது தான்.
உடல் பருமனானவர்களுக்கும் ஆழ்ந்த தூக்கம் சாத்தியமாகாமல் போகலாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்களுக்கும் களைப்பு அதிகமிருக்கலாம். தூக்கத்தோடு சேர்த்து உப்பும் இவர்களுக்குத் தேவையாக இருக்கலாம்.
இவர்கள் ஓஆர்எஸ் பவுடர், சாதம் வடித்த கஞ்சியில் உப்பு சேர்த்தது, நீர்மோர் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைக் குடித்தால் களைப்பு நீங்கும்.
ரத்தச்சோகை இருக்கும் பெண்களும் எப்போதும் களைப்பாக உணர்வார்கள். இவர்கள் எல்லோரும் தினமும் கொத்தமல்லி சட்னியோ, கறிவேப்பிலை சட்னியோ, புதினா சட்னியோ செய்து சாப்பிட வேண்டியது மிக அவசியம்.
வாரத்தில் 3 – 4 நாள்களுக்கு கீரை சாப்பிட வேண்டும். வாரம் ஒரு நாளாவது அகத்திக்கீரையோ, முருங்கைக்கீரையோ சாப்பிடலாம். இவையெல்லாம் ரத்தச்சோகை வராமல் தடுக்கும்.
ஹைப்போதைராய்டிசம் பாதிப்புள்ளவர்களுக்கும் எப்போதும் களைப்பு இருக்கலாம். எனவே, களைப்பாக உணர்வதற்கு மேற்குறிப்பிட்டவற்றில் எந்தக் காரணம் உங்களுக்கு இருக்கக்கூடும் என்பதைப் பார்த்து, அதற்கேற்ப சிகிச்சைகள், உணவுப் பழக்கம், வாழ்வியல் முறைகளை மாற்றிக் கொண்டாலே களைப்பு காணாமல் போகும்” என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : வயநாடு செல்லும் ராகுல் முதல் சென்னை புதிய மேம்பாலம் திறப்பு வரை!
கிச்சன் கீர்த்தனா: மஞ்சள் சோயா மில்க்
200 ரூபா பட்ஜெட்… அப்டேட் குமாரு
நிலச்சரிவுக்கு பிறகே மத்திய அரசு எச்சரிக்கை… அமித்ஷாவுக்கு பினராயி பதில்!