பண்டிகை நாட்கள் வந்தாலே, உடல் எடை அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது. வீட்டில் பலமான விருந்து சாப்பாடு, உறவினர் வீடுகளுக்கு விசிட் செய்வது, அளவுக்கதிக இனிப்புகள் சாப்பிடுவது என பல காரணங்களால் சில கிலோ எடை அதிகரித்துவிடும்.
மீண்டும் அதைக் குறைப்பதற்குப் பல மாதங்கள் போராட வேண்டியிருக்கும். பண்டிகை நாட்களில் விருந்துகளைத் தவிர்க்க முடியாத நிலையில், எடை அதிகரிப்பதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க டயட்டீஷியன்ஸ் தரும் டிப்ஸ் இதோ…
“பண்டிகை நாள்களில் உறவினர், நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வதற்கு முன்பு வீட்டிலேயே ஆரோக்கியமான உணவுகளைச் சிறிது சாப்பிட்டுவிட்டுக் கிளம்புங்கள்.
சாம்பார் இட்லி, சாண்ட்விச், முட்டை, பனீர் புர்ஜி, ஒரு கப் தால்…. இப்படி ஏதேனும் ஒன்று சாப்பிட்டு விட்டுக் கிளம்பலாம்.
இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வையும் கொடுக்கும். வெளியிடங்களில் உங்களையும் அறியாமல் அதிகம் சாப்பிடுவதையும் தடுக்கும்.
பண்டிகை நாட்களில் அசைவ விருந்துகளும் சகஜமாக இருக்கும். அப்படி ஒருவேளை உணவு மிகவும் ஹெவியாக அமைந்துவிட்டால், அடுத்த இரண்டு வேளைகளிலும் கவனமாகச் சாப்பிடுங்கள்.
அதாவது அடுத்த வேளைகளுக்கு ஒரு டம்ளர் புரோட்டீன் ஷேக் அல்லது ஆவியில் வேகவைத்த காய்கறிகள் அல்லது ஒரு கப் ஃப்ரெஷ் பழங்கள் மட்டும் சாப்பிடுங்கள்.
உங்கள் தூக்கத்தைத் தியாகம் செய்யாதீர்கள். தினமும் 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் இருப்பது சிறப்பு. அந்தத் தூக்கம் தடைப்படும்போது, களைப்பாக உணர்வீர்கள். அதன் தொடர்ச்சியாக உணவுத்தேடல் அதிகரிக்கும்.
உடற்பயிற்சி செய்வதை எக்காரணம் கொண்டும் தவிர்க்காதீர்கள். உட்கார்ந்து எழுந்திருப்பது, வாக்கிங் என உங்களால் முடிந்த ஏதோ ஒன்றை சில நிமிடங்கள் செய்யுங்கள்.
இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டாலே உங்கள் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தீபாவளி விடுமுறை… ஸ்தம்பித்த சென்னை… சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
மறு அறிவிப்பு வரும் வரை படப்பிடிப்புகளை தொடங்க வேண்டாம் : தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!
லண்டனில் போன் செய்ய பணம் இல்லாமல் தவித்த ரத்தன் டாடா… அமிதாப் சொன்ன தகவல்!
வாக்காளர் அட்டையை திருத்துவது எப்படி?