கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு வொர்க் ஃப்ரம் ஹோம் கலாச்சாரம் பரவத் தொடங்கியதும் பலர் `ஜீரோ ஆக்டிவிட்டி’ அளவுக்கு வந்துவிட்டனர். உடற்பயிற்சி, உடல் இயக்கம் போன்றவை குறைந்துவிட்டன.
இதுதவிர, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தையும் மேற்கொள்கின்றனர். வேலையிழப்பு, நிலையற்ற தன்மை, சம்பளக் குறைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மன அழுத்தமும் அதிகரித்துள்ள நிலையில் பலருக்கும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைப் பார்க்க முடிகிறது.
ஆனால், ரத்தக் குழாய் அடைப்புகளை உணவு மற்றும் உடற்பயிற்சிகளின் நீக்க முடியும் என்கிறார்கள் இதயநல மருத்துவர்கள்.
உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ, அதேபோல் ஆரோக்கியமாக வாழ உணவும், உடற்பயிற்சியும் அவசியம்.
தாய்ப்பாலுக்குப் பிறகு வேறு உணவு சாப்பிட ஆரம்பித்ததில் இருந்து, ஒரு குழந்தை 10 கிலோ எடையிலிருக்கும்போதிலிருந்தே ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிய ஆரம்பிக்கலாம்.
ஆனால், அது அன்றாட வாழ்க்கையைத் தொந்தரவு செய்வதில்லை. 50 சதவிகிதத்தைத் தாண்டும்போதுதான் அது நோயாகக் கருதப்படுகிறது. 50 சதவிகிதத்துக்கும் குறைவான அடைப்பு இருக்கும்போது அது பரிசோதனையில்கூட தெரியாது.
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற வாழ்வியல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, புகைபிடிப்பவர்களுக்கு இள வயதிலேயே ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படலாம்.
மன அழுத்தம், உடல் பருமன், உடல் இயக்கம் இல்லாமல் இருப்பது, துரித உணவுகள், அதிக கொழுப்புச்சத்து, இனிப்புச்சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதன் மூலம் வாழ்வியல் சார்ந்த நோய்களைத் தடுப்பதோடு மாரடைப்பு ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.
இன்றைய வாழ்க்கை முறையில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுதோறும் அடிப்படை மருத்துவப் பரிசோதனை செய்வதன் மூலம் இதயத்தில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று கண்டறிய முடியும். குடும்ப வரலாறு, வாழ்வியல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 35 வயதுக்கு மேல் ஆண்டுதோறும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
அதற்கடுத்து மருத்துவ ஆலோசனைப்படி மாவுப் பொருள் உணவுகளைக் குறைத்துக்கொள்வது, நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளைச் சேர்ப்பது, கொழுப்பு உணவுகளைத் தவிர்ப்பது, புகை, மதுவைத் தவிர்ப்பது, சீரான உடற்பயிற்சி, தியானம், யோகா செய்வது…
இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறினால் மாரடைப்பைத் தடுத்து மகிழ்ச்சியாக வாழலாம்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஃபிரெஷ் கோஸ் சாலட்
அந்த புண்ணியவானுக்கு போன் போட்ட புண்ணியவான்: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: பம்பரம் இல்லை… பானைக்கு சிக்கல்… திமுக ரியாக்ஷன் இதுதான்!
அடுத்தடுத்து அதிவேக அரைசதங்கள்.. RCB சாதனையை முறியடித்த SRH..!