சன்ஸ்கிரீன் பல வகைகளில் நமக்குக் கிடைக்கிறது. இதனை தேர்வு செய்வதில் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.
குறிப்பாக, நம் சருமத்தின் தன்மையின் அடிப்படையில் சன்ஸ்கிரீனை தேர்வு செய்திட வேண்டும்.
“சன்ஸ்கிரீனை தேர்வு செய்யும் முன், குறிப்பிட்ட அந்த அந்த சன்ஸ்கிரீன் எவ்வளவு நேரம் நம் சருமத்துக்குப் பாதுகாப்பைத் தரும் என்பதை கவனிக்க வேண்டும்.
சன்ஸ்கிரீனை வாங்கும்போது, அதில் SPF 10 (Sun Protection Factor SPF) என்று இருந்தால், 10 x 5 நிமிடங்கள் எனக் கணக்கிட வேண்டும். அதாவது, 10 x 5 = 50. அந்த சன்ஸ்கிரீன் 50 நிமிடங்களுக்கு அவர்களின் சருமத்தை பாதுகாக்கும் என்று அர்த்தம்.
இதேபோல் அடுத்தடுத்த SPF எண்களைக் கவனித்து, பாதுகாப்புக் கொடுக்ககூடிய நிமிடங்களை கவனித்து, தேவைக்கேற்ப வாங்க வேண்டும்.
அடுத்ததாக, சன்ஸ்கிரீனில் SPF PA +++ என்று குறிப்பிட்டிருந்தால், இது அல்ட்ரா வயலட் கதிர் ‘ஏ’-ல் இருந்து பாதுகாப்பைக் கொடுக்கும்.
முக்கியமாக சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுக்கும் முன் நம் சருமத்தின் தன்மையை அறிய வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள் எண்ணெய் கலந்த SPF பயன்படுத்தலாம்.
எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் ஜெல் அல்லது மேட் ஃபினிஷில் கிடைக்கக்கூடிய சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். க்ரீம், லோஷன், ஃபவுண்டேஷன் கலந்தும்கூட சன்ஸ்கிரீன் கிடைக்கிறது. தேவை, விருப்பத்தைப் பொறுத்து வாங்கிக்கொள்ளலாம்.
சன்ஸ்கிரீனை அப்ளை செய்தவுடன் உடனே வெயிலில் செல்லக் கூடாது. குறைந்தபட்சம் வெயிலில் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக அதை அப்ளை செய்திட வேண்டும்.
முகம், கை, கால் என சருமத்தில் வெயிலால் அதிகம் பாதிப்படைய வாய்ப்புள்ள பகுதிகளில் சன்ஸ்கிரீனை அப்ளை செய்திட வேண்டும்.
நன்றாக முகம் கழுவிய பின், சருமத்தில் முழுவதும், குறிப்பாக நெற்றி, காது, மூக்கு, கழுத்து, கண்களின் கீழ்ப்பகுதி போன்ற பகுதிகளில், மிகவும் மென்மையாக, வட்ட வடிவில் மசாஜ் போன்று செய்துகொண்டே அப்ளை செய்திட வேண்டும்.
இதற்கு மேல் பவுடர், ஃபவுண்டேஷன்கூட அப்ளை செய்து கொள்ளலாம். உடனே அப்ளை செய்யாமல் 10 நிமிடங்களுக்குப் பின் அப்ளை செய்யவும்.
காலையில் அப்ளை செய்த சன்ஸ்கிரீனை மாலை வரை அப்படியே விடக் கூடாது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் சன்ஸ்கிரீன் அதிகபட்ச பாதுகாப்பு தரும் நேரத்துக்குப் பின்னரோ, மதிய நேரத்திலோ, முகத்தை அலசி மீண்டும் சன்ஸ்கிரீனை அப்ளை செய்வது நல்ல பலனை தரும்.
மொத்தத்தில், எந்த வகை சருமம், நிறம் என்றாலும் அனைவருமே சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது” என்கிறார்கள் சருமநல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : சோயா பீன்ஸ் இட்லி
மீண்டும் அதே அல்வாவை கிண்டிருவாங்களோ? அப்டேட் குமாரு
சென்னையில் மீண்டும் மினி பஸ்… போக்குவரத்துக் கழகம் கட்டுப்பாடு!
தொழில் துறையில் 9.5% வளர்ச்சி: நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன்